திமுக தோல்வியுறும் என்பது தாலினே அறிந்ததுதான்! – இலக்குவனார் திருவள்ளுவன்

திமுக தோல்வியுறும் என்பது தாலினே அறிந்ததுதான்!  கடந்த 13 ஆண்டுகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில்  இப்பொழுது முதன் முறையாக ஆளுங்கட்சி தோற்கடிக்கப்பட்டு விட்டது. ஆளுங்கட்சியுடன் சேர்ந்து முதன்மை எதிர்க்கட்சியான திமுகவும் தோற்கடிக்கப்பட்டு விட்டது.  இராதாகிருட்டிணன் நகர் இடைத்தேர்தலில் திமுக தோற்றதன் காரணம் தாலின் என்பதுபோலும் திமுக தொண்டர்கள் விலைக்குப் போனதும்தான் எனவும் எழுதப்பட்டும் பேசப்பட்டும் வருகின்றன. உண்மையில் முற்றிலும் தவறான செய்திகளாகும் இவை. தினகரன், தி.மு.க. கூட்டணி என அதிமுக கூறுவது தன் தோல்வியை மறைக்கத்தான். எதிர்க்கட்சி கூட்டணி வைத்தால் தோல்வியுறும் என்றால் அதிமுக வலிமையாக…

அதிர வைத்த தினகரனின் அதிரடி வெற்றி! – இலக்குவனார் திருவள்ளுவன்

அதிர வைத்த தினகரனின் அதிரடி வெற்றி!    இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால், கனவுகளில்  வாழ்ந்தவர்களும் அவர் வெற்றி பெறக்கூடாது எனக் கருதியவர்களும் கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற எண்ணிய முகவர்களும் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். சின்னமும் கட்சியும் ‘மத்திய ஒத்துழைப்பால்’ கிடைத்தமையால் மக்கள் ஆதரவும் கிடைக்கும் எனத் தப்புக் கணக்கு போட்டமையால் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.  ‘’தினகரன் வெற்றி பெற்றால் பாசகவின் பிடி தளரும் என்ற நம்பிக்கையில் உள்ளவர்கள் அவர் வெற்றி பெறுவதை விரும்புகின்றனர்” என முன்னரே…

அறவாணர்களே ஆட்சிக்குத் தேவை! அறவழியிலே தேர்தல் தேவை! – இலக்குவனார் திருவள்ளுவன்

  அறவாணர்களே ஆட்சிக்குத் தேவை! அறவழியிலே தேர்தல் தேவை! தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும் விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில். (திருவள்ளுவர், திருக்குறள் 256) உண்பதற்காக உயிரினங்களைக் கொல்ல விரும்புவோர் இல்லாவிட்டால் இறைச்சியை விலைக்குத் தர யாரும் முன்வரமாட்டார்கள் என்கிறார் திருவள்ளுவர். வாக்களிக்கக் கையூட்டு அல்லது அன்பளிப்பு என ஏதும் வாங்குவார் இல்லையெனில், அவ்வாறு தர யாரும் முன்வரமாட்டார்கள் என்று சொல்வதற்கும் பொருந்தும். “நம்மிடம் பறித்த பணத்தைத்தான் நமக்குத் தருகிறார்கள்” “வெற்றிக்குப் பின்னர் பண அறுவடை  செய்யப்போகிறவர்கள் அதில் சிறு பகுதியை நமக்குத் தரும் பொழுது…

தேர்தல் ஆணையமே! முடிவை மாற்றிக்கொள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தேர்தல் ஆணையமே! முடிவை மாற்றிக்கொள்!   பா.ச.க.வின் கைப்பாவையாக இந்தியத் தேர்தல்ஆணையம் செயல்படுவது அனைவரும் அறிந்ததே! இதன் காரணமாகத் தமிழ்நாட்டின்  ஆட்சியில் தடுமாற்றமும் தமிழக அரசியலில் குழப்பமும் ஏற்பட்டுள்ளன. கட்சிகளில் பிளவு என்பது ஒன்றும் புதியதல்ல. ஆனால், கட்சியின் தலைமையை முடிவு செய்பவர்களாக மக்கள்தாம் இருந்துள்ளார்கள்! தேர்தல் ஆணையம் அல்ல! பேராய(காங்கிரசு)க் கட்சியில் பிளவு பட்ட பொழுது இந்திரா காந்தியின் தலைமைக்கு  ஏற்பளித்தவர்கள் மக்கள்தாம், தேர்தல் ஆணையம் அல்ல!   தி.மு.க.வில் பிளவு வந்தபொழுது அதிமுகவிற்கு ஏற்பளித்தவர்களும் மக்கள்தாம்! தேர்தல் ஆணையம் அல்ல! தி.மு.க.வில்…

ஆளத் தகுதியானவர் யார்?: செயலலிதா சொன்ன குட்டிக்கதை

ஆளத் தகுதியானவர் யார்?: செயலலிதா சொன்ன குட்டிக்கதை   இன்று (மாசி 16, 2047 / பிப்.28, 2016) சென்னை இராதாகிருட்டிணன் நகர் தொகுதியில் நடந்த விழாவில் முதல்வர் செயலலிதா பேசுகையில் ஆளத் தகுதியானவர் யார் என்பது குறித்து விளக்கக் கூறிய குட்டிக்கதை வருமாறு:–   ஓர் ஊரில் அரசர் ஒருவர் தனக்கு அடுத்தபடியாக நாட்டை ஆளத் தகுதியானவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விரும்பினார். அதற்கென்று சில போட்டிகளை வைத்தார்.   அதில் பல பேர் கலந்து கொண்டனர். கடைசியாக இருவர் மட்டுமே மிஞ்சினர்….