ச.மெய்யப்பனார் பிறந்தநாள் விழா – மெய்யப்பன் அறக்கட்டளை பரிசு வழங்கு விழா

ஆனி 06, 2050 வெள்ளி 21.06.2019 மாலை 6.00 இரசியப் பண்பாட்டு அரங்கம், கத்தூரிரங்கன் சாலை சென்னை மணிவாசகர் பதிப்பக நிறுவனர் பதிப்புச் செம்மல் முனைவர் ச.மெய்யப்பனார் 87 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மெய்யப்பன் அறக்கட்டளையின் சிறந்த தமிழறிஞர் விருது சிறந்த நூல்களுக்கான நூலாசிரியர் விருது சிறந்த பதிப்பக விருது நூல் வெளியீடு விருது வழங்குநர் : தோழர் இரா.நல்லகண்ணு அன்புடன் ச.மெ.மீனாட்சி சோமசுந்தரம் தலைவர், மெய்யப்பன் அறக்கட்டளை இராம.குருமூர்த்தி மேலாளர், மணிவாசகர் பதிப்பகம்    

கவிஞர் மு.முருகேசு நூலுக்கு முதல் பரிசு

கவிஞர் மு.முருகேசு எழுதிய கட்டுரை நூலுக்குச் சிறந்த வாழ்வியல் நூலுக்கான முதல் பரிசு     வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு  ஊரைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேசு எழுதிய ’இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?’ எனும் நூலுக்கு, கவிதை உறவு வழங்கும் ’மனிதநேயம் மற்றும் வாழ்வியல் நூலுக்கான முதல் பரிசு’ கிடைத்துள்ளது.      கடந்த 46 ஆண்டுகளாகச் சென்னையிலிருந்து வெளிவரும் ‘கவிதை உறவு’ சார்பில், 15 ஆண்டுகளாகத்  தமிழில் வெளியாகும் சிறந்த படைப்பிலக்கிய நூல்களுக்குப் பரிசுகள் வழங்கிச் சிறப்பிக்கின்றனர்.     2017- ஆம் ஆண்டு வெளியான சிறந்த நூல்களுக்கான பரிசளிப்பு விழா…

கவிஞர் மு.முருகேசிற்குக் குன்றக்குடி அடிகளார் விருது

கவிஞர் மு.முருகேசிற்குக் குன்றக்குடி அடிகளார் விருது     சென்னை. ஐப்பசி 12, 2048 / அக். 29. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் புது நூற்றாண்டுப் புத்தக இல்லமும் (என்.சி.பி.எச்.) இணைந்து நடத்திய போட்டியில் வெற்றி பெற்ற நூல்களுக்கு சென்னை முகப்பேரிலுள்ள வேலம்மாள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.  இவ்விழாவில்,  வந்தவாசியை அடுத்த  அம்மையப்பட்டு ஊரைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேசு எழுதிய ‘ஒல்லி மல்லி குண்டு கில்லி’ எனும் நூல், 2016-ஆம் ஆண்டில் வெளியான சிறந்த சிறுவர் இலக்கிய நூலாகத் தேர்வு…