தமிழ் எழுச்சியின் சின்னமாகவும் இயக்கமாகவும் வாழ்ந்து காட்டிய பேரா. சி. இலக்குவனார் ”சலுகை போனால் போகட்டும் – என் அலுவல் போனால் போகட்டும் தலைமுறை ஒரு கோடி கண்ட – என் தமிழ் விடுதலை ஆகட்டும்” என்ற புரட்சிக்கவிஞரின் பாட்டு இலக்கணத்திற்கு இலக்கியமாகவும் தமிழ் எழுச்சியின் சின்னமாகவும் விளங்கியவர்தான் ‘இருபதாம் நூற்றாண்டுத் திருவள்ளுவர்’ என்று போற்றப்படும் பேரா. சி. இலக்குவனார். நாட்டு விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் புரட்சி நடத்திய போராளிகளை உலகம் அன்று முதல் இன்று வரை கண்டு வருகிறது. ஆயுதம் ஏந்தாமல் மக்கள்…