இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 35: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 34 தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 35  உமா மகேசுவரம்பிள்ளை   தமிழகத்தில் மறுமலர்ச்சியைத் தோற்றுவித்த தந்தை பெரியாரின் தொண்டர் இவர். தஞ்சை மாவட்டத்தின் நாட்டாண்மைக் கழகத் தலைவராய் இருந்தவர். திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ் மாணவர்க்கு(பார்ப்பனர் அல்லாதார்) படிக்க உதவிகள் செய்தவர். ‘தமிழ்ப் பொழில்’ என்னும் மாத இதழை நடத்தியவர். தூய செந்தமிழ்த் தொண்டர். இத்தகைய பெரியார் மறைவு குறித்து ‘துன்பமாலை’ என்னும் தலைப்பில் கவிதை பாடியுள்ளார், இலக்குவனார். அறுசீர் ஆசிரிய விருத்தத்தால்…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 34: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 33 தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 34 கையறு நிலைக் கவிதைகள்   கையறு நிலை என்பது புறப்பொருள் பாடல்களில் அமைந்துள்ள ஒரு துறையாகும். அரசன் இறப்ப அவனைச் சார்ந்தோர் அவ்விறந்து பாட்டைச் சொல்லி ஒழுக்கம் தளர்தல் என்பது பொருளாம்.  ‘செய்கழல் மன்னன் மாய்ந்தெனச் சேர்ந்தோர்  கையற வுரைத்துக் கைசேர்ந் தன்று’ 90 இறந்தனுடைய புகழை எடுத்துக்கூறி இரங்கினும் கையறுநிலை என்னு ம்  துறையாம். ‘கழிந்தோன் தன்புகழ் காதலித் துரைப்பினும்  மொழிந்தனர் புலவர் அத்துறை…