இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 32

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 31 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’  32  சொல் ஒன்று தன்னை உணர்த்தாது தன்னோடு தொடர்புடையதனை உணர்த்தும். இதனை ஆகுபெயர் என்பர்.  தாமரை போன்ற முகம் என்பதில் தாமரை இலை, கொடி முதலியவற்றை உணர்த்தாது அதன் பூவை உணர்த்தி நிற்கின்றது. இவ்வாறு வரும் ஆகுபெயர் வகைகளை,         முதலிற் கூறும் சினையறி கிளவியும்         சினையிற் கூறும் முதலறி கிளவியும்         பிறந்தவழிக் கூறும் பண்புகொள் பெயரும்         இயன்றது மொழிதலும் இருபெயர் ஒட்டும்         வினைமுதல் உரைக்கும் கிளவியொடு தொகைஇ        …

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 31

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 30 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ – 31 அவை சொற்கள் சேருங்கால் அவற்றைச் சேர்ப்பதற்குத் துணைபுரிவன, வினைச்சொல்லில் காலத்தைக் காட்டி நிற்பன, வேற்றுமை அறிவிக்கும் உருபுகளாகி வருவன, அசைகளாக நிற்பன, இசை நிறைத்து நிற்பன, தத்தம் குறிப்பால் பொருள் தருவன, ஒப்பில் வழியால் பொருள் செய்குந என எழுவகைப்படும். இவை சொற்களாக உருவாகி நிற்றல் மட்டுமன்றி, சொல்லுக்கு முன்னும் பின்னும் வரும். தம் ஈறு திரிந்தும் வரும்;  ஓரிடைச் சொல்லை அடுத்தும் வரும்.   சொற்றொடர்களில்  நின்று பலவகைப் பொருள்களை அறிவிக்கும்…