இன்றைய தேவை குறுஞ்சொற்களே! 3/3 . இலக்குவனார் திருவள்ளுவன்

(இன்றைய தேவை குறுஞ்சொற்களே! – 2/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே! 3/3   நெடுமையும் குறுமையும் துறைதோறும் கலைச்சொல், சொல்லாக அமையாமல், பொருள்விளக்கத் தொடராக இருப்பதற்குச் சில எடுத்துக்காட்டு காண்போம். ? centrifuge வெவ்வேறு எடைச்செறிவுள்ள பொருட்களைச் சுழற்சியினால் பிரிக்கும்  இயந்திரம் இங்கு ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்ட பொருள்விளக்கத்தை அப்படியே தமிழில் தந்துள்ளார்களே தவிர, உரிய கலைச்சொல்லை உருவாக்கவில்லை. பொறியின் செயல்பாடு , தோற்ற அடிப்படையில் சுழற்சல்லறைப்பொறி எனலாம். எனினும் இன்னும் சுருக்கமாகப் பிரிவை எனலாம். அல்லது பிரிவை எனக் குறிப்பிட்டு, பிரிவை –…

இன்றைய தேவை குறுஞ்சொற்களே! 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்

(இன்றைய தேவை குறுஞ்சொற்களே! – 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே! 2/3   தெரிபொருளும் புரி பொருளும்     சொல் இடத்திற்கு ஏற்பப் பொருளைப் பெறுகின்றது என்பதை மறந்து நாம் ஏற்கெனவே அறிந்த பொருளையே பொருத்திப் பார்க்கும்பொழுது சொல்லாக்கம் தவறாய் அமைகிறது. இத்தவறு நேரக்கூடாது என விழிப்புடன் இருக்கையில் சொல் விளக்கமாய் அமைந்து விடுகிறது. அதையே மற்றொரு வகையாகவும் கூறலாம். ஒவ்வொரு சொல்லும் வெளிப்படையாகத் தெரிவிக்கும் பொருள் ஒன்று உண்டு. அதே சொல் உணர்த்திப் புரிய வைக்கும் பொருள் பல உண்டு….

இன்றைய தேவை குறுஞ்சொற்களே! . இலக்குவனார் திருவள்ளுவன்

இன்றைய தேவை குறுஞ்சொற்களே!   ‘நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகக்’ கலைச்சொற்கள் உருவாக்கப்படுகின்றன. இவற்றில் ஒரு பான்மை கூட்டுச்சொற்களாக அமைகின்றன. சொலலாக்கம் கூடியவரை தனிச்சொற்களாக அமைக்கப்பட வேண்டும். இவையும் மூன்று அல்லது நான்கு எழுத்துகளுக்கு உட்பட்டக் குறுஞ்சொற்களாய் இருத்தல் வேண்டும்.  நெடுஞ்சொல் அஞ்சி அயல்மொழியிலுள்ள குறுஞ்சொல்லையே எடுத்தாளக் கூடாது என வலியுறுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம். எளிமையும் வழமையும்   அயற்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை உருவாக்குகையில் பெரும்பாலானவை பொருள் விளக்கமாக அமைகின்றன. இதனால் வினைவடிவம், பெயர் வடிவம் போன்று வெவ்வேறு சொல்வடிவங்களில் இதுபோன்ற சொற்களைக் கையாளுகையில்…