(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 8 தொடர்ச்சி) ‘என் சுயசரிதை’ 9: படிப்புதவித்தொகை ஒரு சிறு வேடிக்கையான விசயத்தை இங்கு எழுதுகிறேன். மேற்கண்ட கணிதப் புத்தகங்களுடன் நான் படித்துப் போராடும் போது பன்முறை இப்பரிட்சையில் நான் தேறினால் அப்புத்தகங்களை யெல்லாம் ஒரு கட்டாகக்கட்டி சமுத்திரத்தில் எறிந்துவிடவேண்டுமென்று தீர்மானித்தேன். பிறகு தேறினவுடன் அப்புத்தகங்களின்மீது பச்சாதாபப்பட்டு எங்கள் கல்லூரியில் படித்துவந்த ஒரு ஏழைப் பிள்ளைக்குக் கொடுத்து விட்டேன். எப். ஏ. பரிட்சையில் திரு. நாராயணாச்சாரி, சகதீச ஐயர், வே. பா. இராமேசம், சிங்காரவேலு, நான் ஆகிய ஐந்து…