கண்ணியக் காவலர் குலோத்துங்கன் – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழகம் மறக்கக்கூடாதவர்களுள் ஒருவர்!  தமிழக மக்கள், அரசியல் துறையில், இலக்கிய உலகில், கலைப்பணியில், என வெவ்வேறு வகைப்பாடுகளில் என்றும் நினைவில் கொள்ள வேண்டிய தகைமையாளர்கள் பலர் உள்ளனர். அத்தகையோருள் குறிப்பிடத்தக்க ஆன்றோர் கண்ணியம் ஆ.கோ.குலோத்துங்கன் ஐயா அவர்கள்.  “அன்று குலோத்துங்கனுக்காகக் கலிங்கத்துப்பரணி பாடினார் செயங்கொண்டார். இன்று செயங்கொண்டத்தில் குலோத்துங்கன் தமிழ்ப்பரணி பாடுகிறார். எழுத்துத் துறையில் நாளை ஒரு வேந்தனாகத் திகழ்வார்” என்று பேரறிஞர் அண்ணா இவரின் எழுத்துப்பணியைப் பாராட்டி உள்ளதே இவரின் சிறப்பினை அடையாளப்படுத்தும்.   தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கியவர் தொழிலாளர்களின் உற்ற தோழனாக,…

கண்ணியம் ஐம்பெரும் விழா

 மாமன்னன் இராசேந்திர சோழன் அரியணை ஏறிய 1000 ஆவது ஆண்டுவிழா கண்ணியம் 45 ஆவது ஆண்டுவிழா கவிதைப்போட்டி – பரிசு வழங்கும் விழா போட்டி நடுவர்களைச் சிறப்பிக்கும் விழா நூல் வெளியீட்டு விழா புரட்டாசி 09, 2046 / செப். 26, 2015 பிற்பகல் 3.00 மாம்பலம் ஆ.சந்திரசேகர் திருமண மண்டபம், மேற்கு மாம்பலம், சென்னை

எனக்குப் பிடித்த திருக்குறள் – இலக்குவனார் திருவள்ளுவன்

எனக்குப் பிடித்த திருக்குறள்   எந்நாட்டவருக்கும் எக்காலத்தவருக்கும் ஏற்ற   உலகப் பொது நு}லாம் திருக்குறளில் ஏதேனும் ஒரு குறளை மட்டும் சுட்டிக் காட்டி நமக்குப் பிடிக்கும் என்று கூற இயலாது. இருப்பினும் நாம் அடிக்கடி நினைவு கூர்கின்ற திருக்குறள்கள் பல இருக்கும். அவ்வாறு நான் நினைவு கூர்கின்ற திருக்குறள்களில் முதன்மையான ஒன்றைக் கூற விழைகிறேன்,   திருவள்ளுவர் தம் தாய்நாடாகிய தமிழ்நாட்டையோ தாய் மொழியாகிய தமிழ்மொழியையோ எவ்விடத்தும் குறிப்பிடாமல் மக்கள் கூட்டத்திற்காகவே திருக்குறள் நூலைப் படைத்துள்ளார். இருப்பினும் உலக மக்கள் தோன்றிய தென்பகுதியில் வாழ்ந்தோரைக்…

நூற்றாண்டு விழா நாயகர் பேரா. சி. இலக்குவனார் – நவீன்குமார்

நூற்றாண்டு விழா நாயகர் தமிழறிஞர்  முனைவர் பேரா. சி. இலக்குவனார்    ‘’தமிழில்லா வீட்டுக்கு நான் போக மாட்டேன்’’ என்பார் அறிவியக்கக் கவிஞர் சாலை இளந் திரையன். சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே-அதைத் தொழுது படித்திடடி பாப்பா என்று பாரதி பாடினான். தமிழைத் தமிழ்ப்பற்றை வெளிப்படுத்தினான். இப்படிப் பல்வகைச் செல்வமும் எழில் நலமும் படைத்த  செம்மொழியான தமிழ், எண்ணற்ற இன்சுவை இலக்கியங்களைத் தன்னகத்தே கொண்டு தனிச்சிறப்புடைய சிறப்பும் பெற்று. உலகிலேயே முதல் கழகம் கண்ட பெருமையைக் கொண்டிலங்குகிறது. இத்தகைய தமிழை வளர்க்க, உய்விக்க தனது வாழ்நாளை…

கங்கைகொண்ட சோழபுரம் மண்ணின்மைந்தர்களுக்கு வேண்டுகோள்

சோழப்பெருவேந்தன் இராசராச சோழனது அருமைப்புதல்வன் முதலாம் இராசேந்திர சோழன், தி.பி. 1043 முதல் தி.பி. 1075 வரை / கி.பி.1012 முதல் 1044 வரை சோழ மண்ணில் ஆட்சி புரிந்த மாமன்னன். வடக்கே கங்கை முதல் தெற்கே கடாரம் வரை வெற்றி கண்ட வேந்தன்.கங்கை வெற்றிக்குப்பின் அவ்வெற்றியின் நினைவாக ஊரையும் கோவிலையும் தேர்ந்துவந்து அருகே சோழகங்கம் என்னும் ஏரி ஒன்றையும் வெட்டுவித்துள்ளான். கங்கைகொண்ட சோழபுரத்தில் அம்மன்னன் எடுப்பித்த கோவில் கங்கைகொண்ட சோழீச்சுரம் என்ற பெயரில் புகழோடு இன்றும் இருந்து வருகிறது. இக்கோவிலைப் பற்றியும் கங்கைகொண்ட…

மாமன்னன் இராசேந்திர சோழன் அரியணை ஏறிய 1000 ஆவது ஆண்டு விழா (கி.பி. 1014-2014)

ஆடித் திருவாதிரையில் இராசேந்திர சோழன் பிறந்த நாள் விழா மாமன்னன் இராசேந்திர சோழன் 1000ஆவது முடிசூட்டு விழா, கங்கை கொண்ட சோழபுரத்தில் மக்கள் வெள்ளத்தோடு சீரோடும்சிறப்போடும் ஆடி 8, ஆடி9, 2045 / 24, 25-சூலை, 2014 நாள்களில் நடைபெற்றது. விழாவில் மாமன்னன் இராசேந்திரன் பற்றிய நூலும் குறுந்தகடும் வெளியிடப்பெற்றன. கருத்தரங்கமும் நடைபெற்றது.     கங்கை கொண்ட சோழபுரம் காட்சிகள்   சூலை ‘கண்ணியம்’ இதழில் மாமன்னன் இராசேந்திர சோழன் அரியணை ஏறிய 1000 ஆவது ஆண்டுவிழாவை, இந்திய அரசும் தமிழக அரசும்…

‘முடிசூடிய மாமன்னன்’ – கவிதைப் போட்டி

மாமன்னன் இராசேந்திர சோழன் அரியணை ஏறிய 1000 ஆவது ஆண்டுவிழாவை முன்னிட்டுக் ‘கண்ணியம்’ அன்பர்களுக்குக் கவிதைப் போட்டி இறுதி நாள் : ஐப்பசி 13, 2045 / 30.10.2014