இந்தியாவில்தான் இருக்கிறோமா…! – அன்வர் பாலசிங்கம்

இந்தியாவில்தான் இருக்கிறோமா…! – அன்வர் பாலசிங்கம்   காவிரி நீர்ச் சிக்கல் தீவிரமெடுத்ததிலிருந்து தமிழகப் பதிவெண் கொண்ட ஊர்திகள் கருநாடக மண்ணில் எங்கு பார்த்தாலும் தாக்கப்படுவதும்…எரிக்கப்படுவதும்…வண்டிஓட்டுநர்கள் அம்மணமாக்கப்படுவதும்…நாம் இந்தியாவில்தான் வாழ்கிறோமா என்ற பேரச்சத்தை எனக்குள் எழுப்பியுள்ளது.   2011-இல் முல்லைப்பெரியாற்றுச்சிக்கல் தீவிரமெடுத்ததிலிருந்து  தொடர்புடைய இடுக்கிமாவட்டத்தில் மட்டுமல்ல, கேரளத்தின் எந்த மாவட்டத்திற்கும் நீங்கள் தமிழக பதிவெண்கொண்ட ஊர்தியில் போனாலும்,   அலட்சியப் பார்வையை மலையாளிகள் உங்கள் மீது வீசுவதை தவிர்க்க முடியாது. கேரளத்தில் உள் பகுதிகளான கண்ணூர், மலப்புரம், கோழிக்கோடு, பகுதிகளில் தமிழகப் பதிவெண் கொண்ட ஊர்திகளில் …

காவிரித் தீர்ப்பு : காங்கிரசு – பா.ச.க. தலைமைகள் தமிழர்களுக்கு வஞ்சகம்!

காவிரித் தீர்ப்பு : காங்கிரசு – பா.ச.க. தலைமைகள் தமிழர்களுக்கு வஞ்சகம்! தமிழ்நாடு முதல்வர் உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளி வைக்க வேண்டும்! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!    உச்ச நீதிமன்றம் 20.09.2016 அன்று வழங்கியத் தீர்ப்பில், இந்திய அரசு ஒரு மாதத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என்று காலவரம்பு விதித்தும், 21.09.2016 முதல் 27.09.2016 வரை நொடிக்கு 6,000 கன அடி காவிரி நீரைக் கர்நாடகம் தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட வேண்டுமென்றும் கட்டளையிட்டுள்ளது.  நேற்று (21.09.2016)…

தமிழர் கைகளிலும் ஆயுதம்! தலைக்குனிவு யாருக்கு? இ.பு.ஞானப்பிரகாசன்

தமிழர் கைகளிலும் ஆயுதம்! தலைக்குனிவு யாருக்கு?   இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டபொழுது எல்லா மாநில மக்களுமேதான் அதற்காக வெள்ளையரிடம் அடி வாங்கினார்கள். ஆனால், நாடு விடுதலையடைந்த பின்பும் இந்த நாட்டில் அடி வாங்கிக் கொண்டே இருப்பவர்கள் காசுமீரிகள், வடகிழக்கு மாநில மக்கள், தமிழர்கள் ஆகிய மூன்று தரப்பினர்தாம்!  அண்டை மாநிலங்களில் தமிழர்கள் மீதான தாக்குதல் என்பது வழக்கமாகிப் போன ஒன்று. காவிரியில் தமிழ்நாடு தண்ணீர் கேட்டால், தமிழ்நாட்டுப் பதிவு எண் கொண்ட ஊர்திகளை அடித்து நொறுக்குவது; முல்லைப் பெரியாற்றில் தமிழ்நாட்டுக்கு சாதகமாகத் தீர்ப்பு…

முதல்வருக்குத் தண்டனை – எண்ண ஓட்டங்கள் : இலக்குவனார் திருவள்ளுவன்

  ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பொழுது செய்த தவறுகளுக்காகப் பதவிப் பொறுப்பில் இல்லாத பொழுது தண்டிக்கப் பெறும் பொழுது பதவிக்கு இழுக்குவராது. இப்பொழுது புரட்சித்தலைவி செல்வி செயலலிதா முந்தைய முதல்வர் நிலையில்(ஆனி 17, 2012 / சூலை 1, 1991 முதல் பங்குனி 22, 2017 / ஏப்பிரல் 4, 1996 வரை) இருந்த பொழுது வருவாய்க்கு மீறி உரூபாய் 66 கோடி சொத்து வைத்து இருந்தமையால் (புரட்டாசி 11, 2045 / செப். 27, 2014 அன்று)4 ஆண்டுக்காலம் சிறைத்தண்டனையும் உரூபாய் 100…

தமிழைப் புறக்கணித்த இடத்தில் கமல்

பெங்களூரில் அண்மையில் கருநாடகச் செய்தித்துறை, கருநாடகச் சலனச்சித்திரா அகாதமி ஆகியன இணைந்து பன்னாட்டுத் திரைப்படவிழாவை நடத்தின.  இவ்விழாவில் ஒரு தமிழ்த் திரைப்படம்கூட வெளியிடப்படாமல் கருநாடகத்தினர் கவனமாகப் பார்த்துக் கொண்டனர். எனினும் முன்பு ஒரு திரைப்படத்தில் சிக்கல் எழுந்த பொழுது தான் பெங்களூர் அல்லது மைசூரில் குடியிருப்பேன்  என அறிவித்த கமலை மட்டும் அழைத்து விழாவைத் தொடக்கி வைக்கச் செய்தனர். தமிழ்க்கலை உலகைப் புறக்கணித்த கருநாடக விழாவில் கமல் பங்கேற்றது தமிழ்க்கலையுலகினரை அதிர்ச்சி யுறச் செய்துள்ளது. கலைக்கு மொழி வேறுபாடில்லை எனக் கூறி ஏமாற்றுவோர் தமிழைப்…