நீண்ட வழிபோக வேண்டும்! – கவிமணி தேசிகவிநாயகம்
கல்லும் மலையும் குதித்துவந்தேன் – பெருங் காடும் செடியும் கடந்துவந்தேன்; எல்லை விரிந்த சமவெளி – எங்கும்நான் இறங்கித் தவழ்ந்து தவழ்ந்துவந்தேன். கட்டும் அணையேறிச் சாடி வந்தேன்;-அதன் கண்ணறை தோறும் நுழைந்துவந்தேன்; திட்டத் திடர்களும் சுற்றிவந்தேன்-மடைச் சீப்புகள் மோதித் திறந்துவந்தேன். காயும் நிலத்தழல் ஆற்றிவந்தேன்-அதில் கண்குளி ரப்பயிர் கண்டுவந்தேன்! ஆயும் மலர்ப்பொழில் செய்துவந்தேன்-அங்கென் ஆசை தீரவிளை யாடிவந்தேன். ஏறாத மேடுகள் ஏறிவந்தேன்-பல ஏரி குளங்கள் நிரப்பிவந்தேன்; ஊறாத ஊற்றிலும் உட்புகுந்தேன்-மணல் ஓடைகள் பொங்கிட ஓடிவந்தேன். ஆயிரம் காலால் நடந்துவந்தேன்-நன்செய் அத்தனையும் சுற்றிப் பார்த்துவந்தேன்; நேயமுறுப்…
அறிவின் எல்லை கண்ட திருவள்ளுவர் – கவிமணி
இம்மை மறுமையின் – பயன்கள் எவருமே யடையச் செம்மை நெறியினை – விளக்கும் தெய்வ நூல் செய்தோன். வழுக்கள் போக்க வந்தோன் – நல்ல வாழ்வை ஆக்க வந்தோன்; ஒழுக்கம் காட்ட வந்தோன் – தமிழுக்கு உயிரை ஊட்ட வந்தோன். தொன்மை நூல்களெல்லாம் – நன்கு துருவி ஆராய்ந்து, நன்மை தீமைகள் வகுத்த நாவலர் கோமான். எதை மறந்தாலும் – உள்ளம் என்றுமே மறவாப் பொதுமறை தந்த – தேவன் பொய் சொல்லாப் புலவன். அறிவின் எல்லை கண்டோன் – உலகை அளந்து கணக்கிட்டோன்;…
புகழுக்குரிய புலம் பெயர் தமிழர் உழைப்பு! – கவிமணி
தென்னாடு விட்டேகித் தீவாந் தரத்தையெலாம் பொன்னாடாய் மாற்றிப் புரந்திடுவோர் – எந்நாளும் ஓங்கும் அறிவால் உழைப்பால் பெரும்புகழைத் தாங்கும் தமிழரே தாம். பொங்கு கடல் கடந்து – சென்றிப் பூவுலகத் தினிலே எங்கெங்கு வாழ்ந்தாலும் – தமிழர் ஏகக் குலத்தவராம். கோடரி மண்வெட்டி – கலப்பை குந்தாலி ஏந்துவோரே நாடெலாம் ஆளுகின்ற – உண்மை நாயக ராவாரையா! பாழ் நிலத்தையெல்லாம் – திருத்திப் பண்படுத்தி மக்கள் வாழ் நிலமாகத் – தமிழர் மாற்றிய தாரறியார்? இலங்கை சிங்கபுரம் – பிசிமுதல் இன்னும் பலவான தலங்களின்…
தமிழ்மக்கள் ஒன்றித்து நின்றால் உயர்வுண்டாம்! – கவிமணி தேசிகவிநாயகம்
என்றும் தமிழ்மக்கள் யாவரும் ஒத்திணங்கி, ஒன்றித்து நின்றால் உயர்வுண்டாம்; – அன்றெனில், மானம்போம், செல்வம்போம், மானிட வாழ்விற்குரிய தானம்போம், யாவும்போம், தாழ்ந்து. பண்டைத் தமிழர் பழம்பெருமை பாடிஇன்னும் மண்டை யுடைத்து வருந்துவதேன்? – அண்டும்இக் காலத்திற் கேற்றகல்வி கற்றுக் கடைப்பிடித்து ஞாலத்தில் வாழ்ந்திடுவோம் நன்கு. வாணிகம் செய்வோம்; வயலிற் பயிர்செய்வோம்; காணரிய கைத்தொழிலும் கண்டு செய்வோம் – பேணிநம் சந்தத் தமிழ்வளர்ப்போம்; தாய்நாட்டுக்கே உழைப்போம்; சிந்தை மகிழ்ந்து தினம். தெய்வம் தொழுவோம்; திருந்தத் தமிழ்கற்போம்; செய்வினையும் நன்றாகச் செய்திடுவோம் – ஐயமின்றி எவ்வெவ் வறமும்…
அருந்தமிழ் நுகர்ந்து மகிழ்வோமே! – கவிமணி
வள்ளுவர் தந்த திருமறையைத் – தமிழ் மாதின் இனிய உயிர் நிலையை உள்ளம் தெளிவுறப் போற்றுவமே – என்றும் உத்தம ராகி ஒழுகுவமே. பாவின் சுவைக்கடல் உண்டெழுந்து – கம்பன் பாரிற் பொழிந்ததீம் பாற்கடலை நாவின் இனிக்கப் பருகுவமே – நூலின் நன்னயம் முற்றுந் தெளிகுவமே, தேனிலே ஊறிய செந்தமிழின் – சுவை தேரும் சிலப்பதி காரமதை ஊனிலே எம்முயிர் உள்ளளவும் – நிதம் ஓதி யுணர்ந்தின் புறுவோமே. கற்றவர் மெச்சும் கலித்தொகையாம் – இன்பக்…
வாய்ப்பு வந்தால் முன்னேற்றமும் வரும்! – கவிமணி
அமிழ்ந்துறையும் மணிகள் ஆழ்கடலின் கீழெவர்க்கும் அறியமுடி யாமல் அளவிறந்த ஒளிமணிகள் அமிழ்ந்துறையும், அம்மா! பாழ்நிலத்தில் வீணாகப் பகலிரவும் பூத்துப் பலகோடிப் பனிமலர்கள் பரிமளிக்கும், அம்மா! கடல் சூழ்ந்த உலகுபுகழ் காவியம்செய் யாமல் கண்மூடும் கம்பருக்கோர் கணக்கில்லை, அம்மா! இடமகன்ற போர்முனைதான் ஈதென்னக் காணா திறக்கின்ற வில்விசயர் எத்தனைபேர், அம்மா! (வேறு) தக்க திறனிருந்தும் – நல்ல தருணம் வாய்த்திலதேல், மிக்க புகழெய்தி – மக்கள் மேன்மை அடையாரம்மா!…
தமிழிசைக்கு நீடுலகில் உண்டோ நிகர்? – கவிமணி
வெந்தழல் நீராகும்; வெள்ளெலும்பு பெண்ணாகும்; வந்தமத வேழம் வணங்கிடுமே; – சந்தமெழப் பாடுவார் உள்ளுருகிப் பாடும் தமிழிசைக்கு நீடுலகில் உண்டோ நிகர்? – கவிமணி தேசிகவிநாயகம் (பிள்ளை)
