செங்கொடி ஊடகம் (செங்கொடிமீடியா டாட் காம்) புதிய இணையத் தளம்

கவிஞர் காசி ஆனந்தன் தொடங்கி வைத்தார்! செங்கொடி வெளியீட்டு நடுவத்தின், sengodimedia.com என்ற இணைய தளம் இன்று (7.6.2014) உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இணையப் பயன்பாடு, இணைய வழி வணிகம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே  கொண்டே வருகிறது. இக் காலக்கட்டத்தில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை இணையம் மூலம் ஒன்றிணைப்பதும்,  இணையவழி வணிகத்தை ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்துவதும் இன்றியமை யாதது. இதனடிப்படையில், செங்கொடி வெளியீட்டு நடுவம் என்ற தயாரிப்பு நிறுவனம் sengodimedia.com என்ற இணையத் தளத்தை உருவாக்கி உள்ளது….

தமிழ் உணர்வு – உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனார்

தமிழென் அன்னை! தமிழென் தந்தை! தமிழென்றன் உடன் பிறப்பு! தமிழென் மனைவி! தமிழென் பிள்ளை! தமிழென் நட்புடைத் தோழன்! தமிழென் சுற்றம்! தமிழென் சிற்றூர்! தமிழென் மாமணித் தேசம்! தமிழ்யான் வாழும் எழில்மா ஞாலம்! தமிழே என்னுயிர் மூலம்!