(பூங்கொடி 22 : கொழுநன் ஆவேன் – தொடர்ச்சி) பூங்கொடி காமங் கடந்தவள் நல்லியல் மாதர் நலம்பெறு வாழ்வைச் செல்வச் செருக்கால் சேர்வுறு பிறப்பால் வெல்லக் கருதின் விளைவது வேறு;          115 சொல்லக் கூசேன் மெல்லியல் மாத ரார் பிள்ளைப் பூச்சிகள் அல்லர் பெரியோய்! காமங் கதுவக் கருத்தினை விடுப்பின் நாமங் கேடுறும் நல்லறங் தீயும் தீமை பற்பல சேர்வது திண்ணம்      120 மாதரார் உளப்பாங் கியாதென உணர்ந்து காதல் மேற்கொளல் கடமை யாகும்; காமங் கடந்தவள் காமம் என்னும் கள்வன் றனக்கே புகஇடம்…