(தோழர் தியாகு எழுதுகிறார் 14 : அனல் கீழ் பனித் திரள்-தொடர்ச்சி) காலநிலை மாற்றம் ஊட்டி வளர்க்கும் வறுமையும் அடிமைமுறையும் காலநிலை மாற்றம் என்றால் என்ன? கோடைக் காலத்தில் வெப்பமும் குளிர் காலத்தில் குளிரும் கூடுதலாக இருக்கும் என்பதுதான் என்றால், வெப்பதட்பத்தைச் சீர்செய்ய உதவும் மின் பொறிகளின் துணைகொண்டு சமாளித்து விடலாம். பெருமழை பெய்வதுதான் என்றால் குடை அல்லது மழையங்கி கொண்டு சமாளிக்கலாம். புயல்தான் என்றால் பாதுகாப்பாக இருந்து கொள்ளலாம். இவையெல்லாம் இடையில் வந்து போகிறவை என்றால் நிலையாகக் கவலைப்பட ஒன்றுமில்லை. நாம் வழக்கம்…