கீழாநெல்லிச் செடிக்கு மிகு தேவை   தேவதானப்பட்டிப் பகுதியில் மஞ்சள் காமாலை வேகமாக பரவி வருவதால் கீழாநெல்லிச் செடிக்கு மிகு தேவை ஏற்பட்டுள்ளது.   மஞ்சள்காமாலை நோய் வந்தால் கல்லீரல் பாதிக்கப்படும். கல்லீரல் பாதிப்படைந்தால் கை, கால், வயிற்றுப்பகுதி வீங்குவதோடு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. கல்லீரல் பாதிப்படைந்தால் அதற்கான ஆய்வுக் கருவிகள், மதுரையிலும் சென்னையிலும்தான் உள்ளன. பணவசதியற்றவர்களால் இந்த மருத்துவம் மேற்கொள்ளமுடிவதில்லை. இதனால் பழைய மருத்துவமுறையான ஆயுர்வேத, சித்த மருத்துவர்களை நாடுகிறார்கள்.   சித்தமருத்துவத்தில் கீழாநெல்லிச்செடியைப் பொடி ஆக்கி அதன்பின்னர் ஆட்டுப்பாலில் கலந்து தொடர்ந்து…