சங்கத்தமிழ் தந்தால் சந்தப்பா தருவேன் – ஔவையார்: நாக.இளங்கோவன்

“பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலஞ்செய் துங்கக்கரிமுகத்துத்தூமணியே நீ எனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தா.”   பிள்ளையாரின் அடியாரான ஒளைவையார் ஆக்கிய இந்தப்பாடலை தமிழ்படித்த, பேசுகின்ற எவரும் ஏதோவொரு வழியில் படித்தோ பேசியோ பாடியோ இருப்பார்கள். தமிழ்நாட்டில் அத்தனைப் புகழ்பெற்றது இந்தப்பாடல். தமிழ்வழிபாடுகளில் இடம்பெறும் பாடல்களில் முக்கியமான பாடல் இதுவென்றால் மிகையன்று.  அழகும், வெற்றியும் அணிசெய்கின்ற கரிமுகத்தானிடம் ஔவையார் மூன்றுதமிழை கேட்கிறார், நாலுபொருளை தருவதாகக்கூறி. இறைவனுக்கு, நாம் விரும்பும் உணவினையெல்லாம், அவன்விரும்பும் உணவுப்பொருள்களாகச் சொல்லி படையலிட்டு…

சங்கத்தமிழ் வீரனின் அம்பும் இராமனின் அம்பும் – அறிஞர் அண்ணா

இதுதான் வீரமா? இந்தக் கதையை அறிவுடையதென்று ஏற்கமுடியுமா?  வில்வீரன் ஒருவன் வில்லிலே நாணேற்றி அம்பைப் பூட்டி விசையாக விடுகிறான், ஒரு புலியைக் குறி வைத்து. 1. அம்பு வில்லினின்றும் விடுபட்டு மிக வேகமாகப் புலியின் உடலை ஊடுருவிச் சென்று, அருகிலிருந்த வாழை மரத்திலே பாய்ந்து நின்று விட்டது. இந்நிகழ்ச்சி உண்மையானது. உருவகப்படுத்தியதன்று. அம்பு புலியின் உடலைத் துளைத்துச் சென்றது என்பது அம்பின் கூர்மையையும் வேகத்தையும் அதை எறிந்தோனுடைய சக்தியையும், குறி தவறாத திறமையையும் குறிக்கிறது.புலியைத் துளைத்தபின் அம்பின் வேகம் குறைகிறது. தடையேற்பட்டதால், 1. எனவே,…

சங்கத் தமிழ் 87 ஆவது மாதக் கூட்ட அழைப்பு

  வைகாசி 30, 2046 / 13-6-2015 சனிக்கிழமை, மாலை 6.00 மணி தலைப்பு- ‘நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் தமிழ்ச் சுவை’ ஆய்வுரை: திரு. சொ. வினைதீர்த்தான். வருக! வருக! இவண் செயலர் த. மு. எ. க. ச. காரைக்குடி.