இக்கரைக்கு அக்கரை பச்சை! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

இக்கரைக்கு அக்கரை பச்சை! இக்கரைக்கு அக்கறை பச்சையென்று எண்ணியே, இக்கறை படிந்து நிற்கும் கட்சிகளை நம்பியே, திக்கினை இழந்து தமிழர் நட்டாற்றில் தவிக்கிறோம்! சக்கரைக்குள் நஞ்சினை மறைத்து வைத்து ஊட்டியே, சிக்கலின்றித் தமிழனின் சிரம் அறுக்கும் துணிவுடன், மெத்தனத் தனத்துடன் வலம்வரும் பகைவரை, உக்கிரக் கொளுந்துவிட் டுதித்திடுஞ் செந்தீயிலே, இட்டழிக்குஞ் சக்திவாய்ந்த தமிழனுக்குத் தேர்தலில், மொத்தமாக வாக்களித்துத் தலைவனாக ஆக்குவோம்! சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

மதிமலர் வாடாமல் மைவிரல் வாள்வீசு! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

மதிமலர் வாடாமல் மைவிரல் வாள்வீசு! மழலையர் பாலுக்கு அழுது ஏங்க, மறுசிலர் மதுவினால் வயிறு வீங்க, முதியவர் நோய்நீக்கும் மருந்து வாங்க, முடியாமல் முதுமையில் சுருண்டு தூங்க, முடைநாற்ற அரசியல் செழித்து ஓங்க, மங்கையர் மனத்துயர் மேலும் ஓங்கும்! மண்குடிசை வீட்டுக்குள் பாம்புகள் ஓட, மாளிகை முற்றத்தில் தோகைமயில் ஆடும்! மழைவளம் இல்லாமல் மண்வயல் வாட, மந்திரிகள் வீட்டிலோ பொன்னூஞ்சல் ஆடும்! மனநலம் திரிந்துலவி மேன்மக்கள் வாட, மணிமுடி தரித்தவர் மீத்தேனை நாட, மட்கலம் போலுடைந்து நொறுங்கும் தமிழா! மதிமலர் வாடாமல் எழுந்து வா!…

அரசியல் மந்திரம் கற்போம்! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

அரசியல் மந்திரம் கற்போம்! தகதிமிதோம்! தகதிமிதோம்! அரசியல் மந்திரம் கற்போம்! தமிழகங் காக்கத் துடித்தெழுந்து, தரங்கெட்ட அரசியல் மாய்ப்போம்! தகதிமிதோம்! தகதிமிதோம்! விரைவினில் மாற்றம் காண்போம், மிகமிகும் மனதின் சீற்றங்களால், சுகம்மிகும் மாற்றம் காண்போம்! தவறென்று தெரிந்தும் திருந்தாத, துரியோ தனகுணத் தலைவர்களும், துச்சா தனகுணத் தடியர்களும், தமிழன்னை மடியில் கைவைத்து, துகிலினை உரித்துத் தெருவில் நிறுத்தி, தொடைதட்டிப் பங்கம் செய்யும் பொழுதும், தலைகுத்தி நின்றால் தாரணி பழிக்கும்! தமிழன்னை சாபம் நம்மை அழிக்கும்! தகதிமிதோம்! தகதிமிதோம்! தீந்தமிழ் நாட்டைக் காப்போம், நெருப்புடன் மோதும்…

நெளவிய ஆட்சி நலமுடன் மலரும்! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

நெளவிய ஆட்சி நலமுடன் மலரும்!   ஒவ்வொரு முறையும் இம்முறை யாவது, செவ்விய நல்லாட்சி அமையும் என்றெண்ணி, இங்கொரு முறையும் அங்கொரு முறையும், அவ்விய வாக்கினை அளித்து ஏமாந்து, கவ்விய இருளில் கலங்கும் தமிழா! செந்தமி ழுணர்வுடன் தமிழர் ஒன்றாகி, ஒன்றுக்குப் பலமுறை சிந்தித்து வாக்கினை, இம்முறை சரியாய் அளித்தால் உடனே, நெளவிய ஆட்சி நலமுடன் மலரும்! [நௌவிய = நவ்விய  = அழகிய] சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

கறைபடிந்த தமிழகத்தின் அரசியலை மாற்றுங்கள்! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

உள்நோக்கம் கொண்டுசில ஊடகங்கள் செயலாற்றி, முள்நீக்கும் பணிமறந்து மூடருக்குத் துதிபாடி, பல்லாக்குத் தூக்குவதில் பரமசுகம் கண்டு, கள்ளாட்டம் ஆடுகின்ற கயவர்களைத் தலைவரென்று, சொல்லாற்றல் கொண்டுபேசித் தமிழர்களின் மனம்மாற்றி, எல்லோர்க்கும் தெரியும்படி எளியனை ஏமாற்றும்! நண்பர்களே! கடைக்கோடித் தமிழனுக்கும் உண்மைகளைக் கொண்டுசெல்ல, கற்றறிந்த தமிழர்களே, உடனெழுந்து வாருங்கள்! இடைத்தரகர் போலின்றி இதயமொன்றி இப்பணியை, இன்முகமாய்ச் செய்திடலாம் இளைஞர்களே வாருங்கள்! உடைத்தெறிந்து ஊடகங்கள் செய்யுமிந்த மாயைகளை, உயிர்சிலிர்த்துப் பாமரர்க்குப் புரியும்படி உரையுங்கள்! இமைக்காமல் உறங்காமல் இருபொழுதும் எப்பொழுதும், நமைக்காக்கும் நல்லரசை அமைக்கும்வழி என்னவென்று, சளைக்காமல் சிந்தித்துச் சகலருக்கும்…

அறம் காப்பார் அடுத்த முதல்வர்! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

அறம் காப்பார் அடுத்த முதல்வர்! அரசு அலுவலகம் அனைத்திலும் இங்கே, முரசு கொட்டியே கையூட்டு கூத்தாடும், அசுரகுல மாந்தர் அங்கு பணியாற்ற, அனைத்து குலமாந்தர் நலமும் பாழாகும்! ஆட்சி அதிகாரம் மாற்றம் கண்டாலும், காட்சி மாறாத கோலம் அங்கென்றும்! ஆற்று மணலென்று மக்களை எண்ணி, அங்கு நாள்தோறும் சுரண்டல் அரங்கேறும்! ஆண்டு ஐம்பதைக் கடந்த பின்னாலும், அவலம் மாறாத கொடுமை நாள்தோறும்! அதனை எண்ணி மனம் வெம்பும் அனைவர்க்கும், அரிய வாய்ப்பாக அமையும் இத்தேர்தல், அறத்தின் வழிநின்று ஆளும் ஒருவரை, அடுத்த முதல்வராய் ஆக்கலாம்…