குட்டி அணில்குட்டி! – சந்தர் சுப்பிரமணியன்

  குட்டி அணில்குட்டி!    கிளைதாவிக் குதிக்கின்றாய்! குட்டி அணில் குட்டி! – நீ தலைகீழேன் நடக்கின்றாய்? குட்டி அணில் குட்டி!   முதுகின்மேல் மூன்றுவரி! குட்டி அணில் குட்டி! – நீ அதைஏனோ சுமக்கின்றாய்? குட்டி அணில் குட்டி!   அடைமழையில் நனைகின்றாய்! குட்டி அணில் குட்டி! – உன் குடைவாலைப் பிடிக்கலையோ? குட்டி அணில் குட்டி!   தொடவேண்டும் நானுன்னை! குட்டி அணில் குட்டி! – தொட விடுவாயோ சொல்லெனக்கு! குட்டி அணில் குட்டி!   – சந்தர் சுப்பிரமணியன்

இந்தோனேசியத் தமிழர் கோபாலனிடம் சந்தர் சுப்பிரமணியம் நேர் காணல் 1/2

இந்தோனேசியத் தமிழர் கோபாலனிடம்  சந்தர் சுப்பிரமணியம் நேர் காணல் 1/2   இந்தோனேசியாவின் எதிர்க்கட்சியான  பார்தை கெரிண்டிரா  (PARTAI GERINDRA) அமைப்பில் அவைத்தலைவர்(chairman) பொறுப்பு வகிக்கும் தமிழர் திரு கோபாலன் அவர்களுடன் இலக்கியவேல் இதழாசிரியர் சந்தர் சுப்பிரமணியன்  நடத்தும் நேர்காணல். வணக்கம். இலக்கியவேல் வாசகர்களுக்காக உங்கள் நேரத்தைச் செலவிட முனைந்ததற்கு நன்றி. வணக்கம். ?   நீங்கள் இந்தோனிசியாவில் வாழ்கிறீர்கள். உங்கள் மூதாதையர் இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து அங்கு சென்றது குறித்த தகவலைப் பகிர்ந்து கொள்ள முடியுமா? என்னுடைய தாத்தா இந்தியாவிலிருந்து இங்கு வந்தவர். நான் மூன்றாவது…

கவிஞாயிறு தாராபாரதி 19 & 20 – சந்தர் சுப்பிரமணியன்

(கவிஞாயிறு தாராபாரதி 17 & 18 தொடர்ச்சி) கவிஞாயிறு தாராபாரதி 19 & 20 – சந்தர் சுப்பிரமணியன் சொல்லுக்குள் கருத்தடைத்த தோட்டா சீறும் துப்பாக்கி அவர்கவிதை! துளைத்த போதும் மல்லுக்காய் முன்நிற்க மயங்கும் நெஞ்சம்! மரணத்தில் புதுநெறியை மலர வைக்கும்! வில்லுக்கு வளைகின்ற நாணைப் போலே வளையாது தலையெனினும் விரட்டும் அம்பை! அல்லுக்குள் வெளிச்சத்தின் ஆற்றல் காட்டும் அறிவுப்பூப் பூகம்பம்! அமைதிப் பூதம்! (19) கவிதைக்கென் றுதித்தாரா? கவிழ்ந்தோர் தம்மைக் கரைசேர்க்கச் செனித்தாரா கவிஞர் தாரா? புவியோர்க்காய்ப் பிறந்தாரா? பொதுமை தாராப் பொய்யகற்றப்…

கவிஞாயிறு தாராபாரதி 17 & 18 – சந்தர் சுப்பிரமணியன்

(கவிஞாயிறு தாராபாரதி 15 & 16 தொடர்ச்சி) கவிஞாயிறு தாராபாரதி 17 & 18 கள்ளத்தின் போக்காலே காற்றின் தூய்மை காணாமல் போனதுபார்! கழிவே எங்கும்! அள்ளத்தான் நீரில்லை! ஆற்றின் தூய்மை அதற்கின்னும் வழியில்லை! அடுத்து வாழும் பிள்ளைக்கோர் நல்லுலகைப் பேணிக் காக்கும் பெருங்கடமை உனக்கிலையோ? பிழைகள் தீர உள்ளத்தின் பரப்பதனில் வெள்ளை தீட்டு! ஓசோனைத் தைப்பதற்கோர் ஊசி தேடு! (17) விண்ணதனை மின்னல்கள் வெட்டும் போக்கின் விளைவாக விரிசல்கள் வாரா தென்றும்! மண்ணதன்மேல் கலப்பையினை மடக்கி ஓட்ட மண்ணுக்கே புண்ணாகும் வழக்கம் உண்டோ?…

கவிஞாயிறு தாராபாரதி 15 & 16 – சந்தர் சுப்பிரமணியன்

(கவிஞாயிறு தாராபாரதி 13 & 14 தொடர்ச்சி) கவிஞாயிறு தாராபாரதி 15 & 16   பேரிருளில் தீச்சுடராய்ப் பொலிந்து நன்மை புரிகின்ற பிறப்பதுவே பெண்மை! உண்மை! ஈரமிலா இயல்பேற்ற இரும்புத் தன்மை, இதயத்தில் நல்லெண்ண மின்மை வன்மை! பாரதனில் மங்கையரின் பங்கு தம்மைப் பாடலினால் அவர்விரித்தார்! பன்மை மென்மை சேருமெனில் தோள்புடைக்கச் சேரும் திண்மை! செந்தமிழில் தெரிவித்தார் தெண்மை! நுண்மை! (15) வேருக்கு நீருழவன் விடுவ தாலே விளைவிங்கே வருகிறது! விழலே நாமும்! பாருக்குள் தெய்வதத்தைப் பாராப் போதும் பயிரெல்லாம் அவன்சிரிப்பைப் படைத்து…

கவிஞாயிறு தாராபாரதி 13 & 14 – சந்தர் சுப்பிரமணியன்

(கவிஞாயிறு தாராபாரதி 11 & 12 தொடர்ச்சி)   கவிஞாயிறு தாராபாரதி 13 & 14 அண்ணல்கை வில்லதுவே அன்னை சீதை அகமெரிக்கும் விறகெனவாய் ஆன தின்று! கண்ணீரில் சீதனங்கள் கடத்தி வந்து கல்யாணச் சிறைபுகுந்த கைதி பெண்டிர்! மண்ணெண்ணெய் விளக்கெரிக்கும் வழக்கம் எல்லாம் மாண்டுவிட்ட கதையாகி மறைந்த நாளில் பெண்ணெண்ணெய் எரிக்கின்ற பேய்கள் கூட்டம்! பெயருக்காய்த் திருமணங்கள்! பிணமாய்ப் பெண்மை! (13) தெருவளைவின் சந்தையதில் தேர்ந்து வாங்க தெருப்பொருளா கால்நடையா தையல் இன்னும்? பொருளளித்துப் பொருள்பெறுதல் பொதுவில் மெய்ம்மை! பொருள்கொடுத்துப் பெண்கொடுக்கும் பொய்ம்மை…

கவிஞாயிறு தாராபாரதி 11 & 12 – சந்தர் சுப்பிரமணியன்

(கவிஞாயிறு தாராபாரதி 9 & 10 தொடர்ச்சி) கவிஞாயிறு தாராபாரதி 11 & 12   மண்ணதற்குள் அழிந்தொழியும் மனிதம் என்னும் மறைகின்ற இலக்கணத்தை மாற்றிக் காட்டு! திண்மையினைக் கொண்டுயர்ந்த திறனால் என்றும் திரும்பாத சரித்திரத்தில் திளைத்து வாழ்நீ! உண்மையிதே! உன்னளவில் உயர்வு வேண்டி உடைமைதேடி உலகுழல்தல் உயர்வே அன்று! திண்ணைதனை இடித்தங்கோர் தெருவை ஆக்கு! தெருவாங்கே விரியுமதில் தேசம் காண்பாய்! (11) பள்ளத்து மண்புழுவைப் பாம்பாய் மாற்றிப் படமெடுக்க வைக்குமவர் பாக்கள்! பூக்கள் அள்ளித்தான் அவர்தெளித்தார்! அனைத்தும் தீமை அழிப்பதற்காய்த் தீயுமிழும் நாக்கள்!…

கவிஞாயிறு தாராபாரதி 9 & 10 – சந்தர் சுப்பிரமணியன்

(கவிஞாயிறு தாராபாரதி 7  & 8 – தொடர்ச்சி) கவிஞாயிறு தாராபாரதி 9  & 10 பொய்யுரையை முதலீடாய்ப் போட்டு நாட்டின் பொதுசனத்தை விற்கின்ற புதிய சாதி! கையிரண்டு போதாது கயமைக் கென்றே கைந்நூறு வேண்டிவிழும் கடவுள் தாளில்! மெய்ந்நெறியை மறைத்துயர்தல் மேன்மை என்ற ‘மெய்ப்பொருளை’ அரசியலாய் விற்கும் கூட்டம்! செய்கையிலே தன்மானம் சிதைத்தோர் தம்மைச் சேர்த்தீன்ற கருப்பையும் சினந்து நாணும்! (9) வெறுங்கரங்கள் என்செய்யும்? வினவு வோர்க்கு, விரல்பத்தும் மூலதனம்! விளங்க வேண்டும்! நொறுங்கட்டும் மதிமயக்கும் நோயாம் சோம்பல்! நோகாமல் இலக்கடையும் நுட்பம்…

கவிஞாயிறு தாராபாரதி 7 & 8 – சந்தர் சுப்பிரமணியன்

(கவிஞாயிறு தாராபாரதி 5 & 6 – தொடர்ச்சி) கவிஞாயிறு தாராபாரதி 7 & 8   சாதியெனும் அமைப்புகளேன்? சங்கம் வைத்துச் சந்தையென மனிதரையேன் தரம் பிரித்தாய்? போதைநிலைப் பொய்க்கணக்கின் போக்கில் இன்று பொதுநிலையே மனக்கணக்காய் போன திங்கு! தீதெனினும் தொடர்கின்ற தீயாய்ச் சாதி! தேசத்தின் கறையிவைதான்! தெரிந்தி வற்றை வீதியிலே தூக்கியெறி! மெய்யாய் நல்ல வேள்விக்கோர் தேதிகுறி! விடியும் என்றார்! (7) மண்புழுவாய்ப் பிறந்திருந்தால் மண்ணைத் தின்னும் மந்திரம்தான் தெரிந்திருக்கும்; மனிதர்க் கெங்கே? எண்ணளவில் அதிகரிக்கும் ஏழை மக்கள்! இதைத்தானா சுதந்திரத்தின்…

கவிஞாயிறு தாராபாரதி 5 & 6 – சந்தர் சுப்பிரமணியன்

(கவிஞாயிறு தாராபாரதி 3 & 4 – தொடர்ச்சி)   கவிஞாயிறு தாராபாரதி 5 & 6  அல்லுலகை ஆள்கின்ற அந்தப் போதில் ஆதவன்காண் கிழக்கிந்த அன்னை பூமி! புல்வெளியைப் பூக்காடாய்ப் புதுக்கி எங்கும் புன்னகையைப் புழங்கவிட்ட புதுமை தேசம்! சொல்லுலவுங் கவிபடைத்துச் சொந்த நாட்டின் தூய்நெறியைத் தீந்தமிழால் சொல்லிச் செல்வோர் நல்லுலகில் அன்றமைந்த நாற்றங் காலாய் நடைபயின்ற பாரதத்தை நயந்து நின்றார்! (5) சேய்மையதும் அண்மையதும் தொலைந்தே ஒன்று செய்வினையைச் செயப்பாட்டு வினையைச் செய்தார்! தாய்மையெனத் தமிழ்மொழியின் தன்மை தன்னைத் தமதாக்கி முன்னிலையில்…

கவிஞாயிறு தாராபாரதி 3 & 4 – சந்தர் சுப்பிரமணியன்

(கவிஞாயிறு தாராபாரதி 1 & 2 –  தொடர்ச்சி) கவிஞாயிறு தாராபாரதி 3 & 4  பாடுகின்ற பழக்கமுண்டு; பாட்டில் கீழோர்ப் பாடுகளைப் பகர்வதுண்டு; பழமை எண்ணம் சாடுகின்ற வழக்கமுண்டு; சாதிப் பூசல் தனையெதிர்க்கும் நெஞ்சமுண்டு; சமத்து வத்தைத் தேடுகின்ற தாகமுண்டு; சிறப்பாய்ப் பெண்டிர் சேமமுறச் சிந்தையுண்டு; செயலில் தூய்மை நாடுகின்ற நேர்மையுண்டு; நலிந்தோர் வாழ்வில் நலம்சேர விழைவதுண்டு; நியாயம் உண்டு! (3) துண்டமிலாச் சமுதாயம் தொடங்க வேண்டி, செந்தமிழா! ஒருவார்த்தை செப்பிச் சென்றார்! கண்டதெலாம் அறிவியலால் கணக்கால் ஆயக் கைப்பிடிக்குள் அடங்குமவை காண்போம்;…

கவிஞாயிறு தாராபாரதி 1 & 2 – சந்தர் சுப்பிரமணியன்

கவிஞாயிறு தாராபாரதி 1 & 2 அவருக்குள் தமிழ்மணக்கும், அறிந்தே முன்னர் அன்னைபெயர் புட்பமென அமைந்த தாமோ? குவளைக்குள் பூகம்பம்! கொடையாய்ச் செந்தீ! கொடுங்காலூர் வரையெழுந்து கொதித்த செந்நா! திவலை க்குள் பொறியேற்றுத் தீயைச் சேர்த்துத் திரையாக்கிச் செந்தமிழாய்த் தெறிக்கும் தாரா! இவருக்கோர் கவிமலரை இயற்றி வந்தேன்! இவரெழுத்தை என்குரலில் இயம்பு கின்றேன்! (1) காவியங்கள் பாடவில்லை; காதல் என்னும் கற்பனைக்குள் கரையவில்லை; கானல் நீரைத் தூவிநஞ்சை வளர்க்கவில்லை; சொல்லால் பொய்யைத் தொடுத்தளிக்கும் கவிதையில்லை; சொகுசு வாழ்க்கை மேவுதற்காய் மாறவில்லை; மேன்மை கொன்று மேனிலையை…