சவ்வாது மலைச் சிற்றூர்கள் – பல்லுயிர்ச்சூழல் – நினைவூட்டல்

 சவ்வாது மலைச் சிற்றூர்கள் – பல்லுயிர்ச் சூழல் – நினைவூட்டல் 15  ஆண்டிற்கு முன் வீட்டுக்கு முன் இரண்டு பெரிய வேப்ப மரமும், பெரிய வட்டக் கிணறும், மல்லிகைப் பூந்தோட்டமும்,  இருக்கும்; மழை பெய்தால்  இரவு முழுவதும் தண்ணீர் வாய்க்காலில் ஓடும்  ஒலி கேட்டுக்கொண்டே இருக்கும். இப்படி ஒவ்வொருத்தருக்கும் தங்களுடைய ஊரைப்பற்றின பழைய  நினைவு இருக்கும். ஆனால், இப்பொழுது, இந்த இடம் அவ்வளவு பசுமையாக இருந்தது என்று சொன்னால் யாரும் நம்புவதில்லை. குறைந்தஅளவு பசுமையைக் கண்ணில் பார்ப்பதற்கும் துய்ப்பதற்கும் இருக்கிற கடைசிக் கட்ட வாய்ப்பு…

நாணல் நண்பர்கள், ‎மதுரை சூழலியல் சந்திப்பு

மதுரை சூழலியல் சந்திப்பு  ஐப்பசி 8, 2045 / அக். 25,2014 குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்திணைக் கோட்பாடுகள் இலக்கணமாக பார்க்கப்பட்டனவே தவிர, இன்று உலக விவாதத்திற்குரிய சூழலியல் அறிவியலாக நம்மால் கருத்தில் கொள்ளப்படவில்லை. உயிர்களின் இயங்கியலுக்கு அடிப்படையாக இருக்கும் நிலமும் பொழுதும் முதற்பொருளாக வகுத்து கொண்ட நம் தொல்குடி சமூகம், தெய்வத்தை முதற் பொருளுக்குள் அடக்காமல் அதை கருப்பொருளுக்குள் அடக்குகிறது. நிலமும் பொழுதும் ஆகிய இரண்டு முதற்பொருள்களே, அத்திணையில் உள்ள சூழலைத் தீர்மானிக்கின்றன. எனவே பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பே தான்…