மின்னூல் அறிமுகம் : கோட்பாட்டு வேதியியலுக்கான அடிப்படைக் கணிதம்

மின்னூல் அறிமுகம் : கோட்பாட்டு வேதியியலுக்கான அடிப்படைக் கணிதம் திரு. செயபாண்டியன் கோட்டாளம் அவர்கள் மிகவும் விரிவாகவும் ஆழங்குன்றாமலும் ஓர் அறிவியல் மின்னூல் படைத்துள்ளார். அதன் தலைப்பு: கோட்பாட்டு வேதியியலுக்கான அடிப்படைக் கணிதம் 316 பக்கம் கொண்ட விரிவான நூல். முழுக்கவும் படிக்காவிடினும் அதை இங்கும் அங்குமாகவாவது முழுதுமாகப் பாருங்கள். நான் பார்த்து மிகவும் வியந்தேன், மிகவும் நெகிழ்ந்தேன். வாழ்க ஆசிரியர் செயபாண்டியன் கோட்டாளம் அவர்கள். இவர் முன்னர் வேதிவினையியல் அறிவியலறிஞராக இருந்தவர். இவர் ”Structural Bioinformatics Inc” என்னும் நிறுவனத்தில் தலைமை அறிவியலாளராக…

சீரான கலைச்சொற்களுக்கு வேண்டுகோள் – செயபாண்டியன் கோட்டாளம்

   அறிவியல் தொழில்நுட்ப இலக்கியங்களைத் தமிழில் எழுதுவதிலும் மொழிபெயர்ப்பதிலும் உள்ள ஒரு பெரும் இடர்ப்பாடு என்னவென்றால், அதற்குத் தேவையான கலைச்சொற்கள் இல்லாததாகும். கலைச்சொல் இல்லாத ஒரு கருத்துருவுக்குப் பல எழுத்தாளர்களும் அவரவர் உடனடித் தேவைக்குத் தக்கவாறு பலவிதமாகக் கலைச்சொற்களை உருவாக்குகின்றனர். அவ்வாறு உருவாகும் கலைச்சொற்கள் ஒரே சீரான நடையைப் பின்பற்றி அமைவதில்லை. அவற்றுள் சில செந்தமிழ்ச் சொற்களாகவும், சில கலப்புமொழிச் சொற்களாகவும், வேறு சில ஆங்கிலச் சொற்களாவும் அமைகின்றன. எல்லா எழுத்தாளர்களும் ஒரே சீராக எழுத வேண்டுமானாலும், ஒன்றுடனொன்று இயைபுடைய அறிவியல் நூல்கள் தமிழில்…