(தோழர் தியாகு எழுதுகிறார் 155 : காந்தியாரின் இந்தி பிரசார சபாவும் மோதியாரின் தமிழ் பிரசார சபாவும் 2 – தொடர்ச்சி) அன்பர் தமிழ்க்கதிர் கேட்கிறார்… இன்றைய தாழி (172) மடலில் பொதுமை, குமுகியம், குடியாட்சியம், தேசியம் என்ற தலைப்பில் தாங்கள் வரைந்த கட்டுரையில் – மக்கார்த்தியம் போன்ற பொதுமை வெறுப்புக் கொள்கைகள் எப்படிக் குடியாட்சியத்தை ஒடுக்க முயன்றன என்பது ஒரு வரலாற்றுப் பாடம் என்றுள்ளீர்கள். “மக்கார்த்தியம்” என்றால் என்ன தோழர்? தாழி விடை: சோசப்பு மக்கார்த்தி என்றோர் அமெரிக்கப் பேரவையினர் (செனட்டர்)  1950 பிப்பிரவரியில் குண்டு போடுவது போல் ஒரு செய்தி வெளியிட்டார், அமெரிக்க அயலுறவுத்…