தங்கர்பச்சானின் ‘சொல்லத்தோணுது’ நூல் வெளியீடு

  பங்குனி 13, 2047 / மார்ச்சு 26, 2015 காலை 10.30 வெளியீடு:  உ.சகாயம் இ.ஆ.ப. பெறுநர்:  மேனாள் நீதிபதி சந்துரு   ஆண்டு முழுவதும் நான்  தமிழ் ‘தி இந்து’ நாளிதழில் எழுதிய அரசியல்,சமூகக் கட்டுரைகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா;  தங்கள் வருகை எனக்கு மகிழ்வைத்தரும். மிக்க நன்றி! -தங்கர்பச்சான்

கண்ணுக்குத்தெரியும் கடவுள்கள் – தங்கர்பச்சான்

  நாட்டில் உள்ளத் துறைகளிலேயே முதன்மையானதாகக் கருதப்படுவது ஊடகத்துறை. மக்களாட்சியில் வாழ்கின்ற மக்களுக்கு வழிகாட்டுவதுடன் சமூகத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லக்கூடிய பொறுப்பும் கடமையும் அவற்றுக்கு உண்டு. நாம் தேர்ந்தெடுத்த அரசு நமக்கு அரணாக இருக்க வேண்டியதுபோல் ஊடகங்களும் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் அரணாக இருக்க வேண்டும். கற்றவர்களும் பாமரர்களும் நாட்டு நடப்புகளை அறிந்துகொள்ள ஊடகங்களையே நம்பி இருக்கிறார்கள். ஒவ்வொரு துறையின் மீதும் மக்கள் நம்பிக்கையை இழந்து கொண்டு வருவதுபோல் ஊடகங்களின் மீதும் இழந்து வருவது பெரும் கவலைக்குரியது. சமூகத்தின் சீர்கேடுகளை அலசும் ஊடகங்கள் தாங்கள் வழி…

அப்பா வேண்டுமா? இலவசங்கள் வேண்டுமா? – தங்கர்பச்சான்

அப்பா வேண்டுமா? இலவசங்கள் வேண்டுமா? – தங்கர்பச்சான் அப்பாதான் வேண்டும் – சிறார்   ஊரைவிட்டுத் துரத்துவதற்காகவும், பிரிப்பதற்காகவுமே பள்ளிக்கூடங்கள். அதைச் சிறப்பாகச் செய்து தருவதுதான் சிறந்த பள்ளி. உடன் பயின்றவர்களைப் பின்னாளில் காணாமலே போக நேரிடுகிறது. நடுவில் சேர்ந்துகொண்டவர்களோடு வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. மகிழ்ச்சியைத் திருப்பித் தருவதற்குக் கடந்துபோன பள்ளி நாட்களாலும் இழந்த காதலி, காதலனாலும் மட்டுமே முடியும்.  ‘பள்ளிக்கூடம்’ திரைப்படத்துக்குப் பின் ஏராளமான பள்ளிகளுக்கு நான் செல்ல நேர்ந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மட்டும், ஒரே ஆண்டில் 60 பள்ளி, கல்லூரிகளுக்குச்…