தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 5 – ஞா.தேவநேயர்

(தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 4  தொடர்ச்சி) தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 5. செம்மை  சொற்களும் சொற்றொடர்களும் வடிவிலும் பொருளிலும் இலக்கண முடிபிலும் வழாநிலை, வழுநிலை, வழுவமைதிநிலை என முந்நிலைப்படும். அவற்றுள், வழுநிலையில்லது செந்தமிழ் என்றும், அஃதுள்ளது கொடுந் தமிழ் என்றும், தமிழை இருவகையாக வகுத்தனர் இலக்கண நூலார். மக்கட்கு ஒழுக்க வரம்பு எத்துணை இன்றியமையாததோ, அத்துணை இன்றியமையாததே மொழிக்கு இலக்கண வரம்பும். சொற்களின் திருந்திய வடிவையும் ஓரிய லொழுங்கையும் தமிழிற்போல் வேறெம்மொழியிலுங் காண முடியாது. எ-டு: தமிழ்                                                     …

தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 4 – ஞா.தேவநேயர்

(தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 3 தொடர்ச்சி) தமிழின் தனிப்பெருந் தன்மைகள் தூய்மை     தமிழ் குமரிநாட்டில் தானே தோன்றி வளர்ந்த தனிமொழியாதலாலும், அதை நுண்ணறிவு மிக்க பொதுமக்களும் புலமக்களும் பண்படுத்தி வளர்த்தமையாலும், நீராவியையும் மின்னியத்தையும் துணைக் கொள்ளாத எல்லாக் கலைகளையும் அறிவியல்களையும் பண்டைத் தமிழரே கண்டறிந்துவிட்டமையாலும், ஆயிரக்கணக்கான உலக வழக்குச் சொற்களும் நூல் வழக்குச் சொற்களும் இறந்துபட்ட இக்காலத்தும், எப்பொருள்பற்றியும், பழஞ்சொற் கொண்டும் புதுச்சொற் புனைந்தும், முழுத் தூய்மையாகப் பேசத் தமிழ் ஒன்றில்தான் இயலும். இவ் வுண்மையை அறிந்தே, தமிழ் வடமொழித் துணையின்றித் தனித்து…

தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 3 – ஞா.தேவநேயர்

(தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 2 தொடர்ச்சி)   3 தமிழின் தனிப்பெருந் தன்மைகள் தாய்மை     பெற்றோரைக் குறிக்கும் அம்மை அப்பன் என்னும் குமரிநாட்டுத் தமிழ்ச்சொற்கள், ஆரியம் உட்பட உலகப் பெருமொழிகள் பலவற்றில் வடிவு திரிந்து வழங்கி வருகின்றன.     நூன், நூம் என்னும் பண்டைத் தமிழ் முன்னிலைப் பெயர்கள், வடநாட்டு இந்தியில் து, தும் என்றும், இலத்தீனில் து, வேஃச்(ஸ்)  என்றும், கிரேக்கத்தில் தூ (சூ), ஃக(ஹ்)மேயிஃச்(ஸ்) என்றும் பழைய ஆங்கிலத்தில்  தூ, யி(யூ) என்றும், சமற்கிருதத்தில் த்வம், யூயம் என்றும் முறையே…

தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 2 – ஞா.தேவநேயர்

(தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 1 தொடர்ச்சி) 2 தமிழின் தனிப்பெருந் தன்மைகள் மென்மை     தமிழர் மாந்தன் வரலாற்றிற் குழந்தைபோல் முந்தித் தோன்றிய இனத்தவராதலால், அவர் வாயில் குழந்தைகளும் முதியவரும் களைத்தவரும் நோயாளிகளும்கூட எளிதாய் ஒலிக்கத் தக்கனவும், பெரும்பாலும் எல்லா மொழிகட்கும் பொதுவானவுமான (உயிர் பன்னிரண்டும் மெய் பதினெட்டுமாக) முப்பது எழுத்தொலிகளே பிறந்திருந்தன.  அதோடு, தனி மெய்யொலியில் தொடங்கும் சொற்களும், வல்லின மெய்யொலியில் இறுஞ் சொற்களும், சில மெய்யொலிகட்குப் பின் சில மெய்யொலிகள் தமித்தோ உயிர்மெய்யாகவோ  இடையில் வருஞ் சொற்களும், அவர் வாயில் வந்ததில்லை….