தமிழாற்றுப்படை விருதுகள் வழங்கப் பெற்றன

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத் தமிழாற்றுப்படை விருதுகள் வழங்கப் பெற்றன. செங்கற்பட்டு, ஆக. 17- தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் காஞ்சிபுரம் – செங்கற்பட்டு மாவட்டங்கள் வழங்கும் தமிழ்சான்றோர்களுக்கான தமிழாற்றுப்படை விருதுகள் வழங்கும் விழா ஆடி 30, 2019 / 15.8.2019 அன்று காலை 11 மணிக்குச் செங்கற்பட்டில் புத்தக அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்திய – இரசிய பண்பாட்டு நட்புறவுக் கழகத்தின் பொதுச் செயலாளர் ப.தங்கப்பன்  27 விருதாளர்களுக்கு விருது வழங்கினார். ஓவியக்கவி நா.வீரமணி  தலைமையில் விருது பெற்றவர்கள்: குரு.சம்பந்தம் – தொல்காப்பியர்…

தமிழ்க் குறும்பாக்கள்  புதிய உயரங்களைத் தொட்டுள்ளன  – கவிஞர் மு.முருகேசு

தமிழ்க் குறும்பாக்கள்  புதிய உயரங்களைத் தொட்டுள்ளன         – கவிஞர் மு.முருகேசு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்(காஞ்சி மாவட்டம்) சார்பில், கவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய குறும்பா(ஐக்கூ)  நூல் வெளியீட்டு விழா செங்கற்பட்டிலுள்ள சைலா அரங்கில் நடைபெற்றது.    இவ்விழாவிற்குக் கலை இலக்கியப் பெருமன்றம் காஞ்சி மாவட்டத் தலைவர் ஓவியக்கவி நா. வீரமணி தலைமை தாங்கினார். கவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய ‘கூடிழந்த பறவையின் குரல்’  எனும் குறும்பா நூலை மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்தியா வெளியிட்டார்.  இதழாளர் கவிஞ்ர்  மு.முருகேசு பெற்றுக்கொண்டார். நூலைப் பெற்றுக்கொண்ட கவிஞர் மு.முருகேசு…

கவிஞர் மு.முருகேசிற்குக் குன்றக்குடி அடிகளார் விருது

கவிஞர் மு.முருகேசிற்குக் குன்றக்குடி அடிகளார் விருது     சென்னை. ஐப்பசி 12, 2048 / அக். 29. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் புது நூற்றாண்டுப் புத்தக இல்லமும் (என்.சி.பி.எச்.) இணைந்து நடத்திய போட்டியில் வெற்றி பெற்ற நூல்களுக்கு சென்னை முகப்பேரிலுள்ள வேலம்மாள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.  இவ்விழாவில்,  வந்தவாசியை அடுத்த  அம்மையப்பட்டு ஊரைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேசு எழுதிய ‘ஒல்லி மல்லி குண்டு கில்லி’ எனும் நூல், 2016-ஆம் ஆண்டில் வெளியான சிறந்த சிறுவர் இலக்கிய நூலாகத் தேர்வு…

இலக்கிய நூல்களுக்கான பரிசுப் போட்டி

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் நியூசெஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து நடத்தும் இலக்கிய நூல்களுக்கான பரிசுப் போட்டி 29ஆம் ஆண்டாக நடத்தப்படவுள்ளது. ஆய்வுநூல்கள், மொழிபெயர்ப்பு, புதினங்கள், சிறுகதை, சிறார் நூல்கள், கவிதை, கட்டுரை, குறும்படம், ஆவணப்படம் என ஒன்பது பிரிவுகளில் இரண்டு சமப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. கவிதை, கட்டுரை நூல்கள், 2016, 2017 இல் வெளிவந்தவையாக இருக்கவேண்டும். படங்கள் 2016, 2017 இல் தயாரிக்கப்பட்டிருக்கவேண்டும். மற்ற வகைகள் 2013க்குப் பின் வெளிவந்திருக்க வேண்டும். கையெழுத்துப்படிகளும் ஏற்றுக்கொள்ளப்படும். 2012க்குப் பிறகு இப்போட்டிகளில் ஏற்கெனவே பரிசு பெற்றவர்கள்…

மு.பாலசுப்பிமணியன் எழுதிய ‘அன்னப்பறவை’ சிறுவர் பாடல் நூலுக்கு விருது

புதுவை மு.பாலசுப்பிமணியன் எழுதிய ‘அன்னப்பறவை’ சிறுவர் பாடல் நூலுக்குக் குன்றக்குடி அடிகளார்விருது  தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், புது நூற்றாண்டு (என்.சி.பி.எச்.) புத்தக நிறுவனம் இணைந்து விருது வழங்கும் விழா – 2016  நடத்தின.  புதுக்கோட்டையில் நடைபெற்ற இவ் விழாவில் சிறந்த நூல்களுக்காண விருதுகள் பல துறைகளில் வழங்கப்பட்டன. சிறுவர் இலக்கியத்துக்கான தவத்திரு குன்றக்குடி அடிகளார் நினைவு விருது புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலர் மு.பாலசுப்பிமணியன் எழுதிய ‘அன்னப்பறவை‘ சிறுவர் பாடல் நூலுக்கு வழங்கப்பட்டது. தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் க.பாசுகரன் …

ஓவியம், ஒப்புவித்தல் போட்டிகள் : மாணவர்களுக்குப் பாராட்டு

மாணிக்கவாசகம் பள்ளியில் ஓவியம், ஒப்புவித்தல் போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு      தேவகோட்டை- தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு  உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் போட்டிகளில் வெற்றி பெற்று பரிசு பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டியிட்டு முதலிடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.    நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மாணவர் இராசேசு வரவேற்றார்.   பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.   தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், தேவகோட்டை கிளையின் சார்பாக…