(திருத்துறைக்கிழார் கட்டுரைகள்  : ரு. தமிழ்நாட்டு மக்கள் செய்ய வேண்டுவன? – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்   தமிழ்நாடு ௬. தமிழ்நாடும் தமிழும் தமிழ்நாட்டில் தமிழின் நிலை நனியும் நலிவுற்றுளது என்பது தெளிவு. ஏனெனில், தமிழ்நாட்டிலுள்ள மக்களின் பெயர்கள் தமிழில் இல்லை. தமிழ்நாட்டுக் கடைத்தெருக்களில் உள்ள கடைகளின் பெயர்களும், தொழில் நிறுவனங்களின் பெயர்களும் தமிழாயில்லை. தமிழ்நாட்டுக் கோவில்களில் உள்ள கடவுளரின் பெயர்களும் தமிழன்று. கோவில் வழிபாடுகளும் தமிழில் நடத்தப்படவில்லை. இலங்கையிலும், மலேசியாவிலும், சிங்கையிலும் தமிழ் தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ளப்பெற்றுள்ளது. ஆனால், இந்தியாவில் தமிழுக்குத்…