தமிழுக்கு ஒளி தந்த தமிழொளி 2 / 4 – சி.சேதுராமன்

(தமிழுக்கு ஒளி தந்த தமிழ்ஒளி 1/4 தொடர்ச்சி) தமிழுக்கு ஒளி தந்த தமிழொளி  2 / 4   1945-ஆம் ஆண்டில் எழுதப்பட்ட தமது கவிதைகள் அனைத்தையும் திரட்டி இரண்டு தொகுதிகளாகத் தமிழ்ஒளி உருவாக்கினார். பாரதிதாசன் நண்பராக விளங்கிய திருவாரூர் டி.எம்.இராமன் என்பார், அத்தொகுதிகளை நூலாக வெளியிடுவதாகக் கூறி கவிஞரிடமிருந்து பெற்றுக் கொண்டார். பின்னர் அந்தக் கவிதைத் தொகுதிகள் இரண்டும் தொலைந்துவிட்டதாகப் பொய் சொல்லிவிட்டார். இது குறித்து மேலும் தகவல் அறிய முயன்ற போது “இருபது வயது இளைஞன் பேரால் இரண்டு கவிதைத் தொகுதிகள்…

விளைச்சல் விழா – பேரறிஞர் அண்ணா!

விளைச்சல் விழா – பேரறிஞர் அண்ணா!   காற்றால் ஆடும் கதிர் ஒலி, கானமாகக் கேட்கிறது அவனுக்கு. நிமிர்ந்து பார்க்கிறான். பொன்னாடை போர்த்தியதுபோலக் காட்சி தருகின்றன கழனிகள் அங்கே, கையிலே கறுக்கரிவாள் ஏந்தி, கக்கத்திலே அறுத்த நெற்கதிர்களோடு, அன்ன மெனச் செல்கிறாள், அழகு மனைவி. வீட்டைப் பார்க்கிறான். வெண் சுண்ணம் அடித்து கூட்டி மெழுகியதால், அங்கே ஒளிவிடும் அழகு அவனுக் கோர் புது உணர்வு தருகிறது. அங்கே – சிற்றாடை தடுக்க – தத்தை போல் தாவி – நிலாமுற்றத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கிறாள் –…