திருக்குறள் முழக்கமும் நகைச்சுவை விளக்கமும் : நூலாசிரியர் வெ.அரங்கராசன் உரை

திருக்குறள் முழக்கமும் நகைச்சுவை விளக்கமும் :  நூலாசிரியர் உரை      ஞானப் பெருநூலாம் திருக்குறள் மேடை முழக்கமாக இல்லாமல், வாழ்வியல் வழக்கமாதல் வேண்டும். அந்த ஞானப் பெருநூல் ஞாலம் முழுதும் பரவும் வகை செய்தல் வேண்டும். திருக்குறளின் திருக்குரல்  ஞாலம் முழுதும் ஓங்கி ஒலித்தல் வேண்டும். ஏனெனில், அது ஞாலப் பொதுமை நூல்; வாழ்வியல் பயன்பாட்டு நூல்.   இந்த அருநூல் குழந்தைகள், சிறுவர்கள், படித்தவர், படியாதவர், பாமரர் என்னும் எவ்வித வேறுபாடுகளோ மாறுபாடுகளோ இல்லாமல், ஞாலம் முழுதும் பரவுதல் வேண்டும், அதற்கு என்னென்ன…

திருக்குறள் தேனீ வெ.அரங்கராசன் நூல் வெளியீடு – ஒளிப்படங்கள்

திருக்குறள் தேனீ வெ.அரங்கராசனின் ‘திருக்குறள் முழக்கமும் நகைச்சுவை விளக்கமும்’ நூல் வெளியிட்டவர் : இலக்குவனார் திருவள்ளுவன் தை 02, 2048 ஞாயிறு  சனவரி 15, 2017 உலகத்திருக்குறள் மையம், திருவள்ளுவர் திருநாள் விழா, உயராய்வு எழுச்சி மாநாடு படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம். படங்கள் : பொறி.தி.ஈழக்கதிர்

திருக்குறள் முழக்கமும் நகைச்சுவை விளக்கமும் : புதுமை விளக்கம் தரும் ஒரு புதிய முயற்சி – முகிலை இராசபாண்டியன்

‘திருக்குறள் முழக்கமும் நகைச்சுவை விளக்கமும்’ – புதுமை விளக்கம் தரும் ஒரு புதிய முயற்சி ஆய்வுரை   இந்தியப் பொதுநூலாகத் திருக்குறளை அறிவிக்க வேண்டும் என்னும் கோரிக்கை இந்திய அரசிடம் தொடர்ந்து எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது.  உலகப் பொதுநூலாகத் திருக்குறளை அறிவிக்க வேண்டும் என்னும் கோரிக்கையும் தற்போது எழுந்து கொண்டி ருக்கின்றது. ஈராயிரம் ஆண்டுகள் கடந்த பிறகும் இன்று புதிதாய்ப் பிறந்தது போன்ற தன்மையுடன் எல்லாருக்குமான அறிவியல் கருத்துகளை அள்ளித் தரும் பெருமை கொண்ட திருக்குறள் உலகப் பொதுநூலாக  அறிவிக்கப்படும் காலம் வரும் என்பதற்கு இந்த…

திருக்குறள் முழக்கமும் நகைச்சுவை விளக்கமும் : அணிந்துரை: கு.மோகனராசு

திருக்குறள் முழக்கமும் நகைச்சுவை விளக்கமும் அணிந்துரை           அன்று திருக்குறள் முனுசாமி அவர்கள், தம் நகைச்சுவைப் பேச்சால் கேட்பவர் மனம் மகிழப் பட்டி தொட்டிகள், நகரங்கள் எனத் தமிழகத்தின் பெரும்பகுதிகளிலும் திருக்குறளைப் பரப்பினார். திருக்குறள் எழுச்சியை உருவாக்கினார்.    இன்று இணைய வலைத் தளங்களின் துணையையும் ஏற்றுத் தம் நகைச்சுவைத் திறத்தால், திருக்குறளுக்கு ஏற்றம் தந்து வருபவர் திருக்குறள் தேனீ பேராசிரியர் வெ. அரங்கராசன் அவர்கள்.      அந்த வரிசையில் வந்ததுதான் திருக்குறள் முழக்கமும் நகைச்சுவை விளக்கமும் என்னும் இந்த நூல்.         இந்த நூலில்…