(தோழர் தியாகு எழுதுகிறார் 90 : காந்தி(யார்?) தொடர்ச்சி) இழிதொழில்புனிதமா? காந்தியார் துப்புரவுத் தொழிலாளர்களை இந்தச் சமூகத்தின் தாய் என்று வண்ணித்தார். குழந்தைக்கு அன்னை செய்யும் கடமைகளை அவர்கள் செய்வதாகச் சிறப்பித்துச் சொன்னார். காந்தியார் நிறுவி நடத்திய ஆசிரமங்களில் அனைவரும் தமது கழிப்பறைகளைத் தூய்மை செய்து கொள்ள வேண்டும். காந்தியார் தன்னை ஒரு பங்கி என்று சொல்லிக் கொண்டார். பங்கிதான் தோட்டி என்பது போல்மலம் அள்ளும் தொழிலாளி. ஒரு முறை அம்பேத்துகருடன் உரையாடும் போது காந்தி சொன்னார்: “அடுத்த பிறவியில் மலம் அள்ளும் தொழிலாளியாகப் பிறக்க விரும்புகிறேன்.”  அம்பேத்துகர்சொன்னார்: “இந்த…