(வெருளி நோய்கள் 1336 -1340 :  தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1341 -1345 அறியப்படாத ஆள், இடம், பொருள் முதலியன குறித்த அளவுகடந்த பேரச்சம் தெரிந்திராமை வெருளி.முன்பின் அறிந்திராதவர்களுடன் பழகுவதால் இன்னல்கள் நேரலாம் என அஞ்சுவர். முன்பின் என்றால் முன்னரோ பின்னரோ எனக் கருதி எப்படி இது சரியாகும் என எண்ணுகிறோம். “முன்பின் செத்திருந்தால்தானே சுடுகாடு தெரியும்” என்றால் நமக்கு முன்னவரோ பின்னவரோ செத்திருந்தால்தானே சுடுகாடு சென்றிருப்போம் எனப் பொருள். அதுபோல் முன்பின் அறியாதவர்கள் என்றால் அவரது குடும்பத்தில் அல்லது வாழ்விடத்தில் அல்லது பணியிடத்தில்…