மக்களாட்சியைக் காத்திடத் தேர்தல் ஆணையத்தைக் கலைத்திடுக! – இலக்குவனார் திருவள்ளுவன்

மக்களாட்சியைக் காத்திடத் தேர்தல் ஆணையத்தைக் கலைத்திடுக!   தேர்தலை நடத்துவதற்கு ஒரு நடுநிலை அமைப்பு தேவை என்பதால்தான் தேர்தல் ஆணையம் தன்னாட்சி அமைப்பாக உருவாக்கப்பட்டது.  மக்களின் அடிப்படை உரிமைகளுள் முதன்மையானது தம்மை ஆளும் மக்களைத் தேர்ந்தெடுக்கும் வாக்குரிமையைப் பயன்படுத்துவது. அதற்கான வாய்ப்பைக்கூடத் தராத செயல்பாட்டுக் குறைவான தேர்தல் ஆணையம் இருந்து என்ன பயன்?  தேர்தலின் பொழுது வாக்காளர் விழிப்புணர்வுப் பரப்புரைகள் நடத்துகின்றனர். உண்மையில் விழிப்புணர்வு வாக்காளர் பதிவு அதிகாரிகளுக்குத் தேவை. நமக்கு 100விழுக்காடு வாக்குப்பதிவிற்காகப் பரப்புரை தேவையில்லை. 100 விழுக்காடு வாக்காளர் பதிவு விழிப்புணர்வுதான்…

தேர்தல் ஆணையம் கோரும் உறுதிமொழி சட்டத்திற்குப் புறம்பானது! – கி.வேங்கடராமன்

மாணவர் வழியாகத் தேர்தல் ஆணையம் கோரும் உறுதிமொழி சட்டத்திற்குப் புறம்பானது! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வேங்கடராமன் கண்டனம்!   “தேர்தலில் வாக்களித்து, சனநாயகத்தில் பங்கு கொள்வீர்” என்ற உறுதிமொழிப் பத்திரம் (Sankalp Patra) தேர்தல் ஆணைய அதிகாரிகளால், அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு, பெற்றோர்களிடம் கையெழுத்து பெற்று வருமாறு மாணவர்கள் வலியுறுத்தப்படுகிறார்கள்.  இந்த உறுதிமொழிப் பத்திரத்தில் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்றும், இதுவரை பதிவு செய்யப்படாதவர்களைப் பதிவு செய்து விடுவோம் என்றும், 2019 ஏப்பிரல் 18 அன்று தமிழ்நாட்டில் நடக்கும்…

தினகரனுக்கு வெற்றிச்சூழலை உருவாக்கும் தேர்தல் ஆணையம் – இலக்குவனார் திருவள்ளுவன்

தினகரனுக்கு வெற்றிச்சூழலை உருவாக்கும் தேர்தல் ஆணையம்  அதிமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுவருவது அனைவரும் அறிந்த உண்மை.  இந்தச் சூழலில்  சசிகலா அல்லது தினகரன் பொறுப்பிற்கு வந்தால் வெறுப்பு  மேலும் மிகுதியாகும் என்ற சூழலே இருந்தது. ஆனால், இவர்களின் வளர்ச்சி கண்டு அஞ்சிய மத்திய ஆட்சி, இவர்களை வேரறுப்பதாக எண்ணி மக்களிடையே  செல்வாக்கை உண்டாக்கி வருகிறது.  நெருக்கடிநிலையினால் ஏற்பட்ட இன்னல்களால் மக்கள் இந்திராகாந்திக்கு 1977 இல் தோல்வியைத் தந்தனர். அவர் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார். ஆனால் அவர் 1980 தேர்தலில் வெற்றிபெற்று அரசை அமைத்தார்….

தேர்தல் ஆணையமே! முடிவை மாற்றிக்கொள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தேர்தல் ஆணையமே! முடிவை மாற்றிக்கொள்!   பா.ச.க.வின் கைப்பாவையாக இந்தியத் தேர்தல்ஆணையம் செயல்படுவது அனைவரும் அறிந்ததே! இதன் காரணமாகத் தமிழ்நாட்டின்  ஆட்சியில் தடுமாற்றமும் தமிழக அரசியலில் குழப்பமும் ஏற்பட்டுள்ளன. கட்சிகளில் பிளவு என்பது ஒன்றும் புதியதல்ல. ஆனால், கட்சியின் தலைமையை முடிவு செய்பவர்களாக மக்கள்தாம் இருந்துள்ளார்கள்! தேர்தல் ஆணையம் அல்ல! பேராய(காங்கிரசு)க் கட்சியில் பிளவு பட்ட பொழுது இந்திரா காந்தியின் தலைமைக்கு  ஏற்பளித்தவர்கள் மக்கள்தாம், தேர்தல் ஆணையம் அல்ல!   தி.மு.க.வில் பிளவு வந்தபொழுது அதிமுகவிற்கு ஏற்பளித்தவர்களும் மக்கள்தாம்! தேர்தல் ஆணையம் அல்ல! தி.மு.க.வில்…

தினகரன் கைது! – மக்கள் தொடுக்கும் ஐய வினாக்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தினகரன்  கைது! – மக்கள் தொடுக்கும் ஐய வினாக்கள்!   பொதுவாகக் கையூட்டு பெறுபவரைத்தான் கைது செய்வார்கள். ஆனால், இங்கே அவ்வாறு கையூட்டு பெறுபவரையோ கேட்டவரையோ கைது செய்யவில்லையே! பணம் கொடுத்து இரட்டை இலைச்சின்னத்தை வாங்க முயன்றதாகத்தானே கைது செய்துள்ளார்கள்?  ஒரு வேளை கையூட்டு பெற விருப்பம் இல்லாத ஒருவர், அவரிடம்  யாரும் குறுக்கு வழியில் ஒரு செயலை முடிக்கக் கையூட்டு  தர முயன்றால், அவ்வாறு தர முயல்பவரைப்பற்றிப் புகார் செய்தால் பணம்கொடுக்க முயன்றவரைக் கைது செய்வார்கள்.  இங்கே அவ்வாறு  தேர்தல் ஆணையர் யாரும்…

தினகரன் வெற்றிவாய்ப்பால் நிறுத்தப்பட்ட இடைத்தேர்தல்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தினகரன் வெற்றிவாய்ப்பால் நிறுத்தப்பட்ட இடைத்தேர்தல்!   அதிமுக தலைவி நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபொழுதே அடுத்த ஆட்சி தம்முடையதுதான் எனக் கனவு கண்டு தலை கால் புரியாமல் குதித்தன பாசகவின் தலைகள். அவர் மறைந்த பின்னர், உடனடியாகத் தம் கைப்பாவையான ஆட்சியை நிறுவினர்.  உண்மை புரிந்து ஆளுங்கட்சி விழித்துக்கொண்டு கைப்பாவையை மாற்றினர். அதன்பின்னரும் பாசக, ஆளுங்கட்சியில் பெரும்பிளவு ஏற்படும் எனக் கனவு கண்டு முயற்சியும் மேற்கொண்டு கானல்நீராய்ப் போனது. இருந்தும் ஆசை யாரை விட்டது? அதிகாரம் கையில் இருக்கும் பொழுது இது கூட முடியாவிட்டால்  இழுக்கென்று…

தேர்தல் ஆணையத்தின் வன்முறை : இன்றைக்குப் பலி அதிமுக! நாளைய பலி திமுக? – இலக்குவனார் திருவள்ளுவன்

தேர்தல் ஆணையத்தின் வன்முறை : இன்றைக்குப் பலி அதிமுக! நாளைய பலி திமுக?  ஓர்ந்துகண்  ணோடாது  இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை. (திருவள்ளுவர், திருக்குறள் 541)  வழக்காயினும், சிக்கலாயினும் வேறு தீர்விற்கு உரியதாயினும் வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடு பாராதே! எப்பக்கமும் சாயாமல் நடுவுநிலையோடு அணுகுக! வழங்கவேண்டிய தீர்ப்பை ஆராய்க! அதனைச் செயல்படுத்துக! அதுவே உண்மையான நீதியாகும் எனத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூறுகிறார்.   சட்டத்தின் முன் யாவரும் சமம் என்பது நமது நாட்டில் சொல்லப்பட்டாலும் நடைமுறையில் சாதிக்கேற்ற நீதி! இருப்பவனுக்கு ஒரு…

தேர்தல் ஆணையம் வெட்கித் தலைகுனிய வேண்டும்! – மரு.இராமதாசு

தேர்தல் ஆணையம் வெட்கித் தலைகுனிய வேண்டும்!  – மரு.இராமதாசு   இடைத்தேர்தலில் திமுகவும் அதிமுகவும் பழைய வேட்பாளர்களை மீண்டும் நிறுத்தத் தேர்தல் ஆணையம் ஒப்புக்கொண்டதற்கு வெட்கி தலைகுனிய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மரு.இராமதாசு தெரிவித்துள்ளார்.   இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் வரும் நவம்பர் 19 அன்று தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறுவதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.   2016 சட்டமன்றத் தேர்தலின்போது தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் பணம் ஆறாக ஓடியதாகவும், இதனால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாகவும் அவர்…

யார் வந்தாலும் வரவேற்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

யார் வந்தாலும் வரவேற்போம்!  வைகாசி 06, 2047 / மே 19, 2016 : வாக்குகள் எண்ணப்பட்டுச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்  அறிவிக்கப்பட்டிருக்கும்; யார் ஆட்சி அமைக்கப் போவது என்று தெரிந்திருக்கும். அதன்படி யார்  ஆட்சி அமைப்பதாக இருந்தாலும் வரவேற்போம்! தேர்தலுக்கு முன்னர் யார், எந்தக் கட்சிக்கு ஆதரவாக இருந்தாலும், அல்லது யார் வரக்கூடாது என்ற எண்ணத்தில் இருந்தாலும், விரும்பியவர் ஆட்சி அமைத்தாலும் விரும்பாதவர் ஆட்சி அமைத்தாலும் வரவேற்போம்!   அஇஅதிமுக வின்  மீது மக்கள் காணும் குறைகள்  வேறுகட்சி மீது இருந்தது என்றால்,…

தேர்தல் ஆணையம் மலிவான விளம்பரம் தேடாமல் கடமையாற்றட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தேர்தல் ஆணையம் மலிவான விளம்பரம்  தேடாமல் கடமையாற்றட்டும்!  தேர்தல் ஆணையம் எப்படிப் பணியாற்றினாலும் ஒவ்வொரு தரப்பாரும் அவரவர் கண்ணோட்டத்தில் குறை கூறத்தான் செய்வர். என்றாலும் தேர்தல் ஆணையத்தில் பணியாற்றுவோர் மனச்சான்றுடன் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். ஆனால், தேர்தல் ஆணையரின்  அறிவிப்புகளைப் பார்க்கும் பொழுது மலிவான விளம்பரத்தில் காட்டும் நாட்டத்தை உரிய கடமையாற்றுவதில் காட்டவில்லை என்றுதான் தெரிகின்றது.   எடுத்துக்காட்டிற்கு ஒன்று:-   தேர்தல் ஆணையம் அவ்வப்பொழுது ஊர்திகளை மடக்கிப் பணங்களைப் பறிமுதல் செய்வதாகச் செய்திகள் வருகின்றன. ஆனால், தேர்தல் ஆணையரின் அறிவிப்பின்படி, இவ்வாறு கைப்பற்றப்பட்ட பணத்தில்…

பல்நிற வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கான வழிமுறைகள்

பல்நிற வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கான வழிமுறைகள்! பல்நிற வாக்காளர் அடையாள அட்டையைப் பெறுவதற்கான கட்டணம் உரூ.25-ஐ இணையத்தளத்திலும் செலுத்தலாம். இதன்படி விண்ணப்பிப்போருக்கு வீடு தேடி வாக்காளர் அட்டை வரும். நாட்டிலேயே முதல் முறையாக, இந்திய அரசு வங்கியுடன்(State Bank of India) தமிழகத் தேர்தல் ஆணையம் இதற்காகப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.  சென்னைத் தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் இராசேசு இலக்கானி இது குறித்து ச்,  செய்தியாளர்களிடம் 29.03.2016 அன்று கூறியதாவது:- பல்நிற வாக்காளர் அட்டையைப் பெறச் செலுத்த வேண்டிய உரூ.25/-…

தேர்தல் ஆணையத்திற்கு ஒரு மடல் : 2 முறையீடு

விடுநர் இலக்குவனார் திருவள்ளுவன் ஆசிரியர்,அகரமுதல இணைய இதழ் 23 எச்., ஓட்டேரிச்சாலை, சென்னை 600 091 பேசி 9884481652 ; 044 2242 1759 மின்வரி : madal@akaramuthala.in பெறுநர் தலைமைத் தேர்தல் ஆணையர், பொது(தேர்தல்கள்) துறை, தலைமைச் செயலகம், சென்னை 600 009 மின்வரி :ceo@tn.gov.in நாள் 21.04.2045 / 04.05.2014 மதிப்பிற்குரிய தேர்தல் ஆணையர் அவர்களுக்கு  பொருள்: வாக்காளர் பட்டியலை முழுமையாக்கலும் வாக்குகளை விலைபேசுவோரைத் தண்டித்தலும் வணக்கம்.    தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து உங்களுக்கு நீங்கேள பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால்…