செய்திக்குறிப்புகள் சில பங்குனி 2,2045, மார்.16, 2014

புதுதில்லி : வீரப்பன் கூட்டாளிகள்  முதலான 15 பேரின் தூக்குத் தண்டனை, ஆயுள்தண்டனையாகக் குறைக்கப்பட்டதை எதிர்த்து, மத்திய அரசு  அளித்த மறு சீராய்வுமுறையீட்டை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இராசீவு வழக்கில் பொய்யாகச் சேர்க்கப்பட்டுப் பழிவாங்கப்படுவோரின் விடுதலையை நிறுத்துவதற்காக மத்திய அரசு போட்ட நாடகம் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது. இனப்படுகோலைப் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் நிலை மோசமாக உள்ளது என்றும் தமிழர்களின்  உரிமைப் போரைச் சிங்களவர்களுடன்  போராட்டங்களுடன் ஒப்பிட முடியாது என்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளரான நிமல்கா பெர்னாண்டோ,  ‘தமிழ் இந்து’ நாளிதழ்ச் செவ்வியில்…

தேவயானியும் இந்திய அரசின் முகங்களும் – இதழுரை

  தேவயானி யார்? நாட்டிற்காக உழைக்கும் நல்லோர் எனப் பாராட்டு பெறுபவரா? மக்களுக்காகப் பாடுபடும் பண்பாளர் என்று  போற்றப் பெறுபவரா? பதவியில் நேர்மை மிக்கவர் என்ற சிறப்பைப் பெற்றவரா? இதற்கு முன்பு வரை ஆதர்சு ஊழல்தான்  அவர் அடையாளமாக இருந்தது. நாட்டிற்காக உயிர் நீத்த வீரர்களை மதிக்கும் வகையிலும் அவர்களின் குடும்பத்தினருக்கு உதவும் வகையிலும் மகாராட்டிர அரசு கட்டித்தந்ததுதான் ஆதர்சுவீடுகள். பொதுவாகவே அரசு குடியிருப்பில் பெறுவோர்  வேறு எங்கும் சொந்த   வீடு வைத்திருக்கக்கூடாது என்பதுதான் விதி. மகாராட்டிர அரசிலும் இந்த விதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால்…

இலங்கைக்கு ஒரு நீதி, அமெரிக்காவுக்கு ஒரு நீதியா? இராமதாசு கண்டனம்!

தமிழர்களை மதிக்காதவர்களுக்குத் தேர்தலில் அடி கிடைக்கும்   வெளியுறவுக் கொள்கையில் இலங்கைக்கு ஒரு நீதி, அமெரிக்காவுக்கு ஒரு நீதியா என்று பாமக நிறுவனர் இராமதாசு கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு : –   ”அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதர் தேவயானி கேப்ரகடே தளையிடப்பட்டதற்காக அந்நாட்டு அரசுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. அமெரிக்க நடவடிக்கைக்கு  எதிரடியாக, இந்தியாவில் அமெரிக்கத் தூதரகத்துக்கும், தூதரகப் பணியாளர்களுக்கும் அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பையும் நயப்பு(சலுகை)களையும் மத்திய அரசு அதிரடியாக நீக்கியிருக்கிறது.     வெளிநாட்டில்…