தோழர்தியாகு எழுதுகிறார் 209 : “செந்தமிழுக்குச்  சேதுப்பிள்ளை”

(தோழர்தியாகு எழுதுகிறார் 208 : இடையன்குடி – காலுடுவெல்லுக்கு முன் – தொடர்ச்சி) “செந்தமிழுக்குச்  சேதுப்பிள்ளை” இனிய அன்பர்களே! இரா.பி. சேதுப்பிள்ளை பற்றி முதலில் எப்போது படித்தேன்?             அறிஞர் அண்ணாவின் சொல்வன்மைக்குச் சான்றாக ஒரு நிகழ்வைச் சொல்வதுண்டு: ஒரு முறை அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பொது மேடையில் இரா.பி. சேதுப்பிள்ளை அண்ணாவிடம், “எதிர்பாராமல் அளிக்கும் தலைப்பில் உடனே பேசுவீர்களா?” என்று கேட்டார்.. “பேசுவேன்” என்று அண்ணா கூறினார். உடனே சேதுப்பிள்ளை அதே மேடையில் “ஆற்றங்கரையினிலே” என்னும் ஒரு தலைப்பை வழங்கினார். ‘அண்ணா எப்படிப் பேசுவாரோ?’ என…

தோழர்தியாகு எழுதுகிறார் 208 : இடையன்குடி – காலுடுவெல்லுக்கு முன்

(தோழர்தியாகு எழுதுகிறார் 207 : தமிழ்மணக்கும் காலுடுவெல் இல்லம் – தொடர்ச்சி) இடையன்குடி – காலுடுவெல்லுக்கு முன் இராபருட்டு காலுடுவெல் குறித்தும் அவரது மொழியியல் ஆய்வு, அதன் முடிவுகள் குறித்தும் அண்மைக் காலத்தில்தான் நிறைய படித்தேன். அரசியல் வகுப்புக்காகப் படித்தமையால் சற்று ஆழ்ந்தே படித்தேன் எனலாம். மொழிநூல் அறிஞர் காலுடுவெல் ‘திராவிடம்’ என்ற சொல்லை ஆண்டார் என்ற ஒரே காரணத்துக்காக  உடனடி அரசியல் தேவைகளுக்காக அவரைக் கொச்சைப்படுத்தும் போக்குகள் தலைதூக்கியிருக்கும் இத்தருணத்தில் காலுடுவெல்லை முறையாக அறிந்து கொள்வதும் அறியச் செய்வதும் தேவை எனக் கருதுகிறேன்….

தோழர்தியாகு எழுதுகிறார் 207 : தமிழ்மணக்கும்காலுடுவெல் இல்லம்

(தோழர்தியாகுஎழுதுகிறார் 206 : வேண்டும்சித்திரவதைத்தடுப்புச்சட்டம் 2/2-தொடர்ச்சி) தமிழ் மணக்கும் காலுடுவெல் இல்லம்  அயல்நாட்டுப் பயணங்களில் வரலாற்று நினைவுச் சின்னங்களைப் பார்க்கப் பெரிதும் விருப்பப்படுவேன். உள்நாட்டிலும் பார்க்க வேண்டியவை பலவும் இருப்பதைக் கால்ந்தாழ்ந்துதான் உணர்ந்தேன். ஆனால் அயல்நாடோ உள்நாடோ அதற்காக யாரையும் தொல்லைப்படுத்தக் கூடாது என்று கவனமாக இருப்பேன். நமக்குள்ள ஆர்வத்தில் கொஞ்சமாவது அவர்களுக்கும் இருக்க வேண்டும். இன்றேல் ஒன்றும் செய்ய முடியாது. அமெரிக்கப் பயணத்தில் நான் சென்று பார்த்தவைபற்றி ஒரு நூலே எழுதலாம், அவ்வளவு செய்திகள் உண்டு. சிக்காகோவில் மே நாள் நினைவுச் சின்னத்தைத்…