(வெருளி நோய்கள் 1436 -1440: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1441 -1445 நாடா(ribbon) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நாடா வெருளிLigament என்றால் விசி=இறுகக்கட்டு எனப் பொருள். உடலியலில் எலும்புகளைப் பிணைக்கும் மெய்ம்மி(திசு) நார், உறுப்புக்களைப் பற்றிப்பிடிக்கும் நரம்பு எனப் பொருள்கள். இது நாடா போன்ற அமைப்பாகும். நாடா அல்லது நாடா போன்ற ஒன்றைப் பார்க்கும் பொழுது அல்லது அதனுடன் தொடர்பு ஏற்படும் பொழுது தேவையற்ற பேரச்சத்திற்கு ஆளாவதை இது குறிக்கிறது.  பரிசுப்பொருள் கட்டு அல்லது பொதிவு மீது  சுற்றிக்கட்டப்பட்டிருக்கும் நாடா-வைக் காணும் பொழுது அல்லது அதனை…