இரு மொழிக் கொள்கைக்கு எதிராகச் செயற்பட்டால் தண்டனை – பாராட்டும் நெறியுரையும்: இலக்குவனார் திருவள்ளுவன்
இரு மொழிக் கொள்கைக்கு எதிராகச் செயற்பட்டால் தண்டனை – பாராட்டும் நெறியுரையும் வழிகாட்டு சாலைப்பலகைகளில் இந்தி இடம் பெறச்செய்ததை அரசு கொள்கைக்கு எதிராகச் செயற்பட்டதாகக் கூறி உரிய அதிகாரிகளுக்குத் தமிழக அரசு தண்டனை கொடுத்துள்ளது. ஆட்சிமாழிச் செயலாக்கத்திற்கு எதிராகச் செயற்படு வோருக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என நாம் பலமுறை இதனை வலியுறுத்திவந்தோம். அதற்கேற்ப அரசின் இரு மொழிக்கொள்கைக்கு எதிராக நடந்து கொண்ட அதிகாரிகளுக்குத் தண்டனை கொடுத்தது பாராட்டிற்குரியது. இதன் தொடர்பில் மேலும் சில செய்திகளை நாம் உணர வேண்டும். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம்…
