வெருளி நோய்கள் 1481-1485: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1476-1480) வெருளி நோய்கள் 1481-1485 1482. நிற்பு வெருளி-Stasibasiphobia/ Stasiphobia/ Stasophobia நிற்றல் குறித்த அளவுகடந்த தேவையற்ற பேரச்சம் நிற்பு வெருளி.நிற்பு வெருளியில் நடப்பதையும் நடை வெருளியில் நிற்பதையும் சேர்த்தே கூறுகின்றனர்.நிற்க இயலாமல் போகும்பொழுது பாதுகாப்பின்மை குறித்த அச்சம் உருவாகி மருட்சியை உண்டாக்குகிறது. நிற்க இயலாமல் போகும் பொழுது கீழே விழுந்து அடிபடலாம், ஊர்திகளில் சிக்கலாம், மரணமடையலாம் என்றெல்லாம் கற்பனைகளை வளர்த்துக் கொண்டு பேரச்சம் கொள்வர்.இயலாமைக்கு மருந்து கவலையல்ல. அந்த இயலாமையைப் போக்குவதே. எனவே இது நடை வெருளி(Ambulophobia) போன்றதே. வீழ்பு…
