மொழிப்போராளிகள் புகழ் வணக்கமும் என்னூல் திறனரங்கமும்

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. (திருவள்ளுவர், திருக்குறள் 22) மார்கழி 07,2055 *** 21.01.2024 காலை 10.00 தமிழ்க்காப்புக் கழகம் இணைய அரங்கம் மொழிப்போராளிகள்  புகழ் வணக்கமும் என்னூல் திறனரங்கமும் கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன், செயலர்,  தமிழ்க்காப்புக் கழகம் தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன் மொழிப் போராளிகளை வணங்குநர் : கவிச்சிங்கம் கண்மதியன் உரைச்சடர் செல்வி ந.காருண்யா செல்வன் மயிலை இளவரசன் நூற்றிறன் அரங்கம் தமிழ்க்களப்போராளி பொழிலன்:…

“செறிவூட்டப்பட்ட அரிசியை நிறுத்துக!”-சென்னையில் கருத்தரங்கு

“உடல் நலத்திற்கும் வேளாண்மைக்கும் எதிரான செறிவூட்டப்பட்ட அரிசியை நிறுத்துக!” சென்னையில் மகளிர் ஆயம் விளக்கக் கருத்தரங்கு! “உடல் நலத்திற்கும் வேளாண்மைக்கும் எதிரான செறிவூட்டப்பட்ட அரிசியை நிறுத்துக!” என்ற தலைப்பில், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மகளிர் அமைப்பான மகளிர் ஆயம் சார்பில், சென்னையில் நூல் திறனாய்வு – விளக்கக் கருத்தரங்கம் நடைபெறுகின்றது. சென்னை எம்ஞ்சியார். நகர் அண்ணா முதன்மைச் சாலையிலுள்ள மகா மகாலில், வரும் சனிக்கிழமை புரட்டாசி 27, 2054 /14.10.2023 /  மாலை 4.30 மணிக்கு நடைபெறுகின்ற இந்நிகழ்வுக்கு, மகளிர் ஆயம் தலைவர் தோழர் அருணா தலைமை தாங்குகினார். மகளிர் ஆயம் பொருளாளர் தோழர் ம. கனிமொழி…

படைப்பிற்குப் பொருள் தரும் பாரதிபாலன் கதைகள் – சா.கந்தசாமி

சொல்லப்படும் வாழ்க்கையோடு இணைந்து போகும் மொழி இலக்கியத்தில் ஏற்படுகின்ற மாறுதல்களை பத்துப்பத்து ஆண்டுகளாகப் பிரித்து, பகுத்துச் சொல்வது ஒரு மரபாக இருக்கிறது. அஃது இலக்கியத்தில் ஏற்பட்டு இருக்கிற மாறுதல், புதிய போக்கு, சிந்தனை என்பது சமூகத்தில் ஏற்பட்ட அளவிற்கு இருக்கிறதா என்பதைத் தீர்மானிப்பது வேறு. சில நேரங்களில் இந்தக் கணிப்பு இலக்கியத்தரம் என்பதை விட்டு விட்டு சமூகக் காரணிகளை மட்டும் கணக்கெடுத்துச் சொல்வதாக அமைந்து விடுவதும் உண்டு. மேலும் சமூக மாறுதல், படைப்பு இலக்கியத்திற்குள் அதிகமாக வராமல் இருக்கிறது என்பதைச் சொல்வது மாதிரியும் இருப்பது…

முனைவர் சி.இலக்குவனார் நினைவேந்தல் & தஞ்சை கூத்தரசனின் நூலாய்வு

ஆவணி 18,  2049, திங்கள், 03.09.2018 மாலை 6.30 அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், எழும்பூர், சென்னை தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி முன்னிலை: பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்  பேராசிரியர் மறைமலை இலக்குவனார் ஆற்றும்  நினைவேந்தல் உரை  & நூல் திறனாய்வு உரை 1.நினைவில் வாழும் பேராசிரியர் சி.இலக்குவனார் சிறப்பியல்புகள் தஞ்சை கூத்தரசன் எழுதிய ‘ஒரு எளிய தொண்டனின் இனிய நினைவுகள்’  ஏற்புரை: தஞ்சை கூத்தரசன்  புதுமை இலக்கியத் தென்றல் (பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி)

தமிழ் நாட்டு வரலாறு – பா.இறையரசன்; நூலாய்வு

தமிழ் நாட்டு வரலாறு – நூலாய்வு பக்.352; உரூ.250; பூம்புகார் பதிப்பகம், சென்னை-108;  044-2526 7543.   மூன்றாம் பதிப்பாக வெளிவந்துள்ள இந்நூலில், முந்தைய பதிப்பில் உள்ள பழைய வரலாற்றுச் செய்திகளோடு அண்மைக்காலச் செய்திகளும் (இக்காலத் தமிழகம்) சேர்ந்துள்ளன. உலகம் தோன்றியது தொடங்கி, தொல் பழங்காலம், கற்காலம், சங்ககாலம், மூவேந்தர் காலம், இருண்ட காலம், பல்லவர் காலம், நாயக்கர் காலம், மராத்தியர் காலம், ஆங்கிலேயர் காலம், தற்காலம் எனத் தமிழக வரலாற்றைத் துல்லியமாகப் பல சான்றுகளோடு சுவைபட விளக்குகிறது.   தொன்மையும் பழைமையும் உடைய…

குமரித்தமிழ்வானம் அமைப்பின் நூற்கள் திறனாய்வு

  நூற்கள் திறனாய்வு குமரித்தமிழ்வானம் அமைப்பின் சார்பில் ப.மாதேவன்(பிள்ளை) எழுதிய”ஒரு கோட்டைக்கதைகள்” சிறுகதைத்தொகுப்பும், கிருட்டிணகோபால் எழுதிய,”ஆடிமாதமும் வயலின் இசையும்” சிறுகதைத்தொகுப்பும் திறனாய்வு செய்யப்படுகின்றன. நாள்:  மாசி 09, 2047 / / 21-02-2016 ஞாயிறு மாலை 4.00 மணி. இடம்:பாபு(சி) நிலையம், மரவாடி(timber depot)தெரு,  இராணித்தோட்டம், நாகர்கோவில்.