அரசியல் தலைவர் விழாவில் அரசியல் பேசாமல் வேறு என்ன பேசுவது? – இலக்குவனார் திருவள்ளுவன்

அரசியல் தலைவர் விழாவில் அரசியல் பேசாமல் வேறு என்ன பேசுவது?     கலைஞர்  கருணாநிதியின் 94 ஆம் பிறந்தநாள் பெருமங்கலத்துடன் சட்டமன்றப்பணிகளின் மணிவிழாவும் நடைபெற உள்ளது.(60 ஆண்டினைக் குறிக்கும் இதனை மணிவிழா என்றுதான் சொல்ல வேண்டும். வைர விழா என்பது தமிழர் மரபல்ல.) இவ்விழா அரசியல் சார்புடையது  எனப் பொன்.இராதாகிருட்டிணன், தமிழிசை முதலான பா.ச.க.தலைவர்கள் கூறுகின்றனர். தன் வாழ்வில் பெரும்பகுதியை அரசியல் உலகில் செலவிட்டவரின் பிறந்தநாளின்பொழுது அரசியல் பேசாமல் எப்படி இருக்க இயலும்?   அரசியல் தலைவர்கள் தேநீர் அருந்தும்பொழுதும் இணைந்து உண்ணும்பொழுதும்…

நெடுவாசல் உண்மைகள்! #கள ஆய்வுக் கட்டுரை – இரா.கலைச்செல்வன்

ஒரு மாதம் தொடர்ந்து எரிந்த எண்ணெய்-இயற்கை எரிவளிக் கூட்டுக் குழுமக் (ONGC) குழாய்! நெடுவாசல் உண்மைகள்! #கள ஆய்வுக் கட்டுரை    மாலை நேரம். நெடுவாசல் சிற்றூரை நெருங்கிக் கொண்டிருந்தேன். வடக்காடு சிற்றூரில் தன் வயலில் குடும்பத்தோடு கடலை பறித்துக் கொண்டிருந்தார் விசயா அக்கா.   “இங்கே என்ன சிக்கல் எனச் சரியாகவே விளங்கவில்லை தம்பி! இந்தப் பக்கத்தில் ஏற்கெனவே எரிநெய்(பெட்ரோல்) எடுப்பதாகச் சொல்லிப் பல ஆண்டுகளுக்கு முன்பே குழாயெல்லாம் அமைத்தார்கள். இப்பொழுது திடீரென ஏதோ புதிதாக நீர்மக் கரிமத் திட்டம் (Hydro Carbon project)…

சுட்டுரைகளில் நெடுவாசல்! – இ.பு.ஞானப்பிரகாசன்

சுட்டுரைகளில் நெடுவாசல்!     புதுக்கோட்டை மாவட்டத்தின் நெடுவாசல் பகுதி முதற்கொண்டு இந்தியா முழுக்க 31 இடங்களில் மண்ணுக்கு அடியிலிருந்து நீரகக் கரிமம் (Hydro Carbon) எடுக்கத் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறது நடுவணரசு.   தரையைக் குடைந்து ஆயிரக்கணக்கான அடிகளுக்கு ஆழ்துளையிட்டு, பல்வேறு வேதிக்கலவைகளைச் செலுத்தி அங்கிருக்கும் எண்ணெய் / இயற்கை எரிவளியை எடுப்பதன் மூலம் குறிப்பிட்ட பகுதி முழுவதையும் வாழத்தகாத இடமாக மாற்றிவிடக்கூடிய இந்தத் திட்டத்துக்கு எதிராகக் கடந்த 15 நாட்களாக அறவழிப் போராட்டம் நடத்தி வருகிறார்கள் நெடுவாசல் பகுதி மக்கள்….