ஊரும் பேரும்: இரா.பி.சேது(ப்பிள்ளை):–11

(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 10 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 11 நெய்தல்‌ நிலம்‌ தொடர்ச்சி பாக்கம் கடற்கரைச்‌ சிற்றூர்கள்‌ பாக்கம்‌ என்று பெயர்‌ பெறும்‌. சென்னை மாநகரின்‌ அருகே சில பாக்கங்கள்‌ உண்டு. கோடம்‌ பாக்கம்‌, மீனம்‌ பாக்கம்‌, “வில்லி பாக்கம்‌ முதலிய ஊர்கள்‌ நெய்தல்‌ நிலத்தில்‌ எழுந்த பாக்கம்‌ குடியிருப்பேயாகும்‌. சில காலத்திற்கு முன்‌ தனித்‌ தனிப்‌ பாக்கங்களாய்ச சென்னையின்‌ அண்மையிலிருந்த சிற்றூர்கள்‌ இப்போது அந்நகரின்‌ அங்கங்க ளாய்விட்டன. புதுப்‌ பாக்கம்‌, புரசை பாக்கம்‌, சேப்பாக்கம்‌, நுங்கம்‌ பாக்கம்‌…

ஊரும் பேரும்: இரா.பி.சேது(ப்பிள்ளை):–10

(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 9 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 10 நெய்தல்‌ நிலம்‌ தமிழ்‌ நாடு. நெடிய கடற்கரை யுடையது. முன்னாளில்‌ “சோழ நாட்டுக்‌ கடற்கரை, சோழ மண்டலக்கரை என  வழங்கிற்று. அஃது ஐரோப்பியர்‌ நாவில்‌ சிதைந்து கோரமண்டல்‌ கரையாயிற்று. பாண்டி நாட்டுக்‌ கடலில்‌ நினைப்பிற்‌ கெட்டாத. நெடுங்‌ காலமாக நல்‌ முத்து விளைந்தமையால்‌ . அக்‌ கரை முத்துக்கரை என்று பிற நாட்டாரால்‌ ‘குறிக்கப்பட்டது.100 சேர நாட்டுக்‌ கடற்கரை, மேல்‌ கரை என்று பெயர்‌ பெற்றது. கரை “கடற்கரையில்‌…