ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 21 : 16. இக்காலம் நாடகக் கலைக்காக உழைத்த சிறுதொண்டுகள் (1)

(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 20 : 15. பேசும் படங்களில் நான் பங்கெடுத்துக் கொண்டது-தொடர்ச்சி) இக்காலம் நாடகக் கலைக்காக உழைத்த சிறுதொண்டுகள் 1938-ஆம் வருசம் முதல் நாடகமாடுவதை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்துக் கொண்டே வந்தேன் என்று சொல்ல வேண்டும். இதற்கு முக்கிய காரணம் எனக்கு விருத்தாப்பியம் மேலிட்டதேயாம். ஆகவே இது முதல் நாடகக் கலைக்காக உழைத்ததைப் பற்றி எழுதுகிறேன். 1939-ஆம் வருசம் உலக இரண்டாம் யுத்தம் ஆரம்பித்த பிறகு நாடகக்கலையே இத்தமிழ் நாட்டில் உறங்கிவிட்டது எனலாம் 1942-ஆம் வருசம் சென்னையிலிருந்து…

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 20 : 15. பேசும் படங்களில் நான் பங்கெடுத்துக் கொண்டது

(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 19 : 12-14. நாடக சம்பந்தமான நூல்கள் தொடர்ச்சி) 15. பேசும் படங்களில் நான் பங்கெடுத்துக் கொண்டது புத்தகங்களை எழுதி அச்சிட்டது போக நான் எழுத்தாளனாக செய்த சில காரியங்களை இனி எழுதுகிறேன். சென்ற சுமார் 20 வருடங்களாக இந்து (Hindu) பத்திரிகைக்கு ஆங்கிலத்திலும், சுதேசமித்திரன், ஆனந்தவிகடன் முதலிய தமிழ்ப் பத்திரிகைகளுக்குத் தமிழிலும் சிறுசிறு வியாசங்கள் எழுதியனுப்பியிருக்கிறேன். இதன்மூலமாக எனக்கு வருவாயும் உண்டு. பேசும் படங்களுக்குச் சில நாடகங்களை எழுதியிருக்கிறேன். இவையன்றிப் பேசும் படங்களுக்கென்றே இதுவரையில் நான் எழுதிய…

பன்னாட்டு வேட்டி நாள் கருத்தரங்கம் – விண் தொலைக்காட்சி : பங்கேற்கிறேன்

இன்று மார்கழி 22,2045 / திசம்பர் 06, 2014 காலை 11.00 – 12.00 மணி நேரத்தில் வாகைத் தொலைக்காட்சி WIN TV இல் ‘நீதிக்காக’ நிகழ்ச்சியில் பன்னாட்டு வேட்டி நாளை முன்னிட்டு நடைபெறும் தமிழ்ப்பண்பாடு குறித்த கலந்துரையாடலில் பங்கேற்கிறேன். http://wintvindia.com. மின்வரியில் இணையத்திலும் காணலாம்.   வாய்ப்பிருப்பின் காண வேண்டுகின்றேன்.   நன்றி. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் தமிழே விழி! தமிழா விழி!