தமிழர் நிலங்களைப் புத்தத் துறவி பறித்துக் கொண்டார்!

பதுளையிலுள்ள தமிழர் நிலங்களைப் புத்தத் துறவி பறித்து(அபகரித்து)க் கொண்டார்! செயலணியில் முறைப்பாடு ஊவா மாகாணம் பதுளையிலுள்ள தங்களது காணிகள் புத்தத்த துறவியால் பறிக்கப்பட்டிருப்பதோடு, மட்டக்களப்பிற்கு ஏதிலியராக (அகதியாக) வந்து 33 ஆண்டுகள் கழிந்தும், வாழ வீடு கிடைக்கவில்லை என்று பெருந்தோட்டப் பகுதி மக்கள் முறையிட்டுள்ளனர்.   நல்லிணக்க முயற்சியின்பொழுது தமிழ்க் குமுகம்(சமூகம்) நிகருரிமை(சமவுரிமை) பெற்று அனைத்து நலங்களுடனும் வளங்களுடனும் வாழ வழி வகை செய்ய வேண்டும் எனக் கோருகின்றோம்.   1983ஆம் ஆண்டு சூலைக் கலவரத்தில் இடம்பெயர்ந்து மட்டக்களப்பு பதுளை வீதிப் பகுதியில் வாழும்…

பதுளை சரசுவதி தேசியக் கல்லூரி : கட்டடத் திறப்பு விழா & அடிக்கல் நாட்டு நிகழ்வு

  பதுளை சரசுவதி தேசியக் கல்லூரியின் புதிதாக அமைக்கபட்ட மாடிக் கட்டடத் திறப்பு விழாவும் ஆசிரிய விடுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இன்று (ஆடி09, 2047 / சூலை 24, 2016) சீரும் சிறப்புமாக நடைபெற்றது.   நிகழ்வில், மாநிலக் கல்விஅமைச்சர் வே.இராதாகிருட்டிணன், அமைச்சர்  அரீன் பெர்ணான்டோ, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத்து,  தசநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான அ.அரவிந்தகுமார், வடிவேல் சுரேசு, ஊவா மாகாண  அவை உறுப்பினர்களான ஆ.கணேசமூர்த்தி, வே.உருத்திரதீபன், எம்.சச்சிதானந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக்  கலந்துகொண்டனர். [படங்களை அழுத்திப் பெரிதாகக் காண்க.]

கோணகலை கீழ்ப்பிரிவுத் தோட்டத்தில் அடிக்கல் நாட்டு விழா

  பதுளை மாவட்டத்தில் பசறை கோணகலை கீழ்ப்பிரிவுத் தோட்டத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 48 குடும்பங்களுக்கு 7 நிலவை காணியில் தனி வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இடம்பெற்றது.   மலைநாட்டுப் புதியசிற்றூர்கள், உட்கட்டமைப்பு வசதிகள், சமுதாயமேம்பாட்டு அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பதுளை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேசு, அரவிந்தகுமார் ஆகியோரும் தொழிலாளர் தேசியச் சங்கத்தின் பதுளை மாவட்ட இணைப்பாளர்  இராசமாணிக்கம்  முதலான பகுதி அமைப்பாளர்களும் கலந்து கொண்டனர். [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]