ஓ.பன்னீர்செல்வம், நிமிர்ந்து நிற்க வேண்டிய நேரம்!   – குவியாடி

பிற கருவூலம் அனலும் புனலும் : ஓ.பன்னீர்செல்வம், நிமிர்ந்து நிற்க வேண்டிய நேரம்!   குவியாடி உரிமைக் குரல் கொடுத்துப் பெயர் பெறுவோர் உலகில் உண்டு. அடிமையாய் அடங்கிப் பெயர் பெறுவோர் தமிழ்நாட்டில் உள்ளனர். அடிமைத் தனத்தின் அடையாளம்தான் போலிப் பணிவு! மூன்று முறை முதல்வராக இருந்த பன்னீர்செல்வம், இந்தப் போலி பணிவுக்கு உதாரணமாக பார்க்கப்படுகிறார். தன்னைத்தானே கீழிறக்கிக் கொள்வதை உணராமல் தற்காப்பு என எண்ணிச் சில முத்துகளை உதிர்த்து வருகிறார் அவர்! 30 ஆண்டுகளாகச் சசிகலா, செயலலிதாவை ஆட்டி வைத்ததாகக் கூறி வருகிறார்…

அகற்ற வேண்டியது அதிமுக அரசையா? எடப்பாடியார் ஆட்சியையா?   – குவியாடி

பிற கருவூலம்   அனலும் புனலும் : அகற்ற வேண்டியது அதிமுக அரசையா? எடப்பாடியார் ஆட்சியையா?   குவியாடி முந்தைய திமுக ஆட்சியின்பொழுது (2006-2011) அதனைச் சிறுபான்மைஅரசு என்றே எப்பொழுதும் செயலலிதா கூறிவந்தார். சட்டமன்றத் திமுக உறுப்பினர்கள் அடிப்படையில் அப்பொழுது திமுக அரசு பெரும்பான்மை பெற்றிருக்கவில்லை. ஆனால், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அடிப்படையில் – காங்கிரசு கூட்டணியால் – அது பெரும்பான்மை அரசாகத்தான் செயல்பட்டுவந்தது. இப்பொழுதோ சட்டமன்ற உறுப்பினர்கள் அடிப்படையில் மட்டுமல்ல, சொந்தக் கட்சி உறுப்பினர்கள் ஆதரவு அடிப்படையில்கூடப் பெரும்பான்மை இழந்து அல்லாடுகிறது அதிமுக!…

தினகரனுக்கு வெற்றிச்சூழலை உருவாக்கும் தேர்தல் ஆணையம் – இலக்குவனார் திருவள்ளுவன்

தினகரனுக்கு வெற்றிச்சூழலை உருவாக்கும் தேர்தல் ஆணையம்  அதிமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுவருவது அனைவரும் அறிந்த உண்மை.  இந்தச் சூழலில்  சசிகலா அல்லது தினகரன் பொறுப்பிற்கு வந்தால் வெறுப்பு  மேலும் மிகுதியாகும் என்ற சூழலே இருந்தது. ஆனால், இவர்களின் வளர்ச்சி கண்டு அஞ்சிய மத்திய ஆட்சி, இவர்களை வேரறுப்பதாக எண்ணி மக்களிடையே  செல்வாக்கை உண்டாக்கி வருகிறது.  நெருக்கடிநிலையினால் ஏற்பட்ட இன்னல்களால் மக்கள் இந்திராகாந்திக்கு 1977 இல் தோல்வியைத் தந்தனர். அவர் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார். ஆனால் அவர் 1980 தேர்தலில் வெற்றிபெற்று அரசை அமைத்தார்….

தினகரன் நிழல் அமைச்சரவை அமைக்கட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தினகரன் நிழல்  அமைச்சரவை அமைக்கட்டும்!      ‘‘எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை’’ என அதிமுக தலைவர்கள் கூறினாலும் அதிமுகவைத் தடுமாற்றத்தில் தள்ளி இயக்கிக்கொண்டிருப்பது பாசக தலைவர்கள்தாம் என்பது அனைவரும் அறிந்ததே! ஆளுங்கட்சிக்கு இணையான வலிமை உடைய எதிர்க்கட்சித்தலைவரைக்கூடச் சந்திக்காத தலைமையர் நரேந்திரர்(மோடி), பத்துபேர் கூட இல்லாத  சிறு பிரிவின் தலைவரை அடிக்கடி சந்திப்பதன்  காரணமும் இதுதானே!  வேளாண்மை நாட்டின் தலைவக இருந்து கொண்டு  வாழ்வாதாரத்திற்காகப் போராடும் வேளாண்குடிப் பெருமக்களைச் சந்திக்க மறுத்துவிட்டுப் பதவிகளுக்காகப் போராடுபவர்களைச் சந்திப்பதன் காரணமும் என்ன? அதிமுகவில் பிளவை உணடாக்க…

இணக்கமாகுங்கள் அல்லது தி.மு.க.விற்கு வழிவிடுங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

இணக்கமாகுங்கள் அல்லது தி.மு.க.விற்கு வழிவிடுங்கள்!   அ.தி.மு.க.வின் குழப்பங்களுக்குக் காரணம் பா.ச.க.தான். சேகர்(ரெட்டி) வழக்கு முதலானவை மூலம், ஒதுங்க நினைக்கும் பன்னீர்செல்வத்தையும் மிரட்டிப் பொங்க வைத்துள்ளது. கரூர் அன்புநாதன்வழக்கு முதலானவை மூலம் நத்தம் விசுவநாதன் போன்றவர்களைப் பன்னீர்ப்பக்கம் நிற்க வைக்கிறது. பன்னீரைக் காட்டிச் சசிகலாவை மிரட்டிப் பணிய வைக்க முயல்கிறது. எனவேதான், பெரும்பான்மையரைச் சசிகலாவிற்கு எதிராக அறிக்கைகள் விடச்செய்தும் சிலரைச் சசிகலாபக்கம் நிற்க வைத்தும் நாடகமாடுகிறது பா.ச.க.   இப்போதைய சூழலில் சசிசலா பக்கம் பா.ச.க. சாய்ந்தால் பன்னீர் அரசியலில் ஒதுக்கப்படுவார். மாறாக அக்கட்சி…

குழப்பங்களுக்குக் காரணம் ஆளுநரை இயக்குபவர்களே! – இலக்குவனார் திருவள்ளுவன்

குழப்பங்களுக்குக் காரணம் ஆளுநரை இயக்குபவர்களே!     தமிழக முதல்வர் பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் விலகியதும் தொடர்ந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்ட மன்றக் கட்சித்தலைவராக வி.கி.சசிகலா என்னும் சசிகலா நடராசனைத் தேர்ந்தெடுத்ததும் பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் தமிழ்நாடு விரைந்து வந்திருக்க வேண்டும். இது தொடர்பில் அவர் மத்திய அரசின் உரியவர்களைக் கலந்தாய்வதும் சட்ட வல்லுநர்களின் கருத்துகளைக் கேட்பதும் முறையானதே! ஆனால், அதை ஒளிவுமறைவாகச் செய்ய வேண்டிய தேவையில்லை. வெளிப்படையாக அறிவித்துவிட்டுத் தமிழ்நாட்டிற்கு வரும் நாளையும் தெரிவிக்கலாம். காலத்தாழ்ச்சி செய்யாமல், ஆளுங்கட்சியின் ச.ம.உறுப்பினர்களின் முடிவை ஏற்றிருந்தால்,…

யார் ஆட்சிக்கு வந்தாலும் மூடநம்பிக்கைகளை மூட்டைகட்டுங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

யார் ஆட்சிக்கு வந்தாலும் மூடநம்பிக்கைகளை மூட்டை கட்டுங்கள்!   தமிழகத்தில் யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை.   சட்ட மன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு உள்ளவர்தான் முதல்வராக முடியும் என்ற நிலைப்பாட்டில் சசிகலா ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார்.   மக்கள் செல்வாக்கு அடிப்படையில் முதல்வராக வேண்டும் எனில் தேர்தலில் பெரும்பான்மைத் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் தலைவர்தான்  ஆட்சிப் பொறுப்பிற்கு வரமுடியும். இதனை அறிந்த பின்னரும் பா.ச.க. ஆதரவால் ஆட்சியமைக்கப் போராடி வருகிறார் பன்னீர்செல்வம்.   அ.தி.மு.க. உட்கட்சிச் சண்டையால் அடுத்த…

பேரா.மறைமலை இலக்குவனார்க்குத் திரு.வி.க. விருதினை முதல்வர் வழங்கினார்.

  பேரா.மறைமலை இலக்குவனார்க்குத் திரு.வி.க. விருதினை முதல்வர்  வழங்கினார். தமிழக அரசின் திருவள்ளுவர் திருநாள்  விழா  சென்னையில், தை 02, 2048 ஞாயிறு  சனவரி 15, 2017 அன்று நடைபெற்றது. அவ்விழாவில் தமிழக முதல்வர், தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்கினார். அதுபோழ்து, தமிழ்த்தென்றல் திருவிக விருதினைப் பேரா.மறைமலை இலக்குவனார்க்கு முதல்வர் பன்னீர்செல்வம் வழங்கினார். [படங்களை அழுத்தின் பெரிய அளவில் காணலாம்.]  

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் : [ஙு] போர்முகம் நோக்கிய இளமைப்பாதை – தொடர்ச்சி : இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்  [ஙீ] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை-தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙு] போர்முகம் நோக்கிய இளமைப்பாதை – தொடர்ச்சி    பெரும்புலவர் ந.மு.வேங்கடசாமி(நாட்டாரின்) இளவல் ந.மு.கோவிந்தராய(நாட்டா)ர் அவர்கள் அடுத்த தலைமையாசிரியராய் மாறுதலில் வந்தார். இவர் அனைவரையும் சிவநெறிக்கண் திருப்பி ஒழுங்கையும் பண்பாட்டையும் நிலைநாட்டினார். தமிழாசிரியர் நாராயணசாமி(பிள்ளை) ஓய்வு பெற்ற பின் மாறி வந்த தமிழாசிரியர் சாமி. சிதம்பரனார் பேராசிரியர் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். அனைவரிடமும் தூய தமிழ்ப்பற்றை வளர்த்த தன்மதிப்புஇயக்கப் பற்றாளரான அறிஞர் சாமி சிதம்பரனார் பேராசிரியர்பால் பேரன்பு கொண்டவர்; …

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் : [ஙீ] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை – தொடர்ச்சி: இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்  [ஙி] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை-தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙீ] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை –     தொடர்ச்சி   தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள (இன்று ஒரத்தநாடு என்றும் சொல்லப்படுகின்ற) உரத்தநாட்டிலும் அரசர்மடம் (இராசாமடம்) என்னும் ஊரிலும் உண்டுறைப் பள்ளிகள்  உள்ளன. அரசர் மடத்தில் பேராசிரியரின் மாமா வீரபத்திரர் அவர்களின் இரு மக்கள் பயின்று வந்தனர். அங்குச் சென்று கல்வி கற்கும் தணியா ஆர்வத்தில் பேராசிரியர் இருந்தார். பேராசிரியரின் தொடக்கப்பள்ளி ஆசிரியரான தமையன் முறையினரான சதாசிவம்(பிள்ளை) அவர்கள் விண்ணப்பம் அனுப்ப…