அகநானூற்றில்  ஊர்கள் : 5/7 – தி. இராதா

(அகநானூற்றில் ஊர்கள் 4/7 இன் தொடர்ச்சி) அகநானூற்றில்  ஊர்கள் : 5/7 கானல்அம்பெருந்துறை                 தித்தன் வெளியன் என்ற அரசன் ஆண்டது இவ்வூராகும். இஃது அழகிய கடற்கரைச் சோலையையுடைய பெருந்துறை என்னும் பட்டினத்துக்கு உரியது. பிண்டன் நன்னனை வென்று வாகை சூடிய இடமாக திகழ்வதனை,                 “……..தித்தன் வெளியன்                 இரங்கு நீர்ப் பரப்பின் கானல்அம் பெருந்துறை” (அகநானூறு152, 210, 280, 300) என்ற அடிகள் மூலம் அறியலாகிறது.   குடந்தை                 வெல்லும் வேலையுடைய வெற்றி பொருந்திய சோழ மன்னரின் குடந்தை என்பதை,…

நூலில் பிறரால் வந்து சேரும் பிழைகள்

நூலில் பிறரால் வந்து சேரும் பிழைகள் மிகைபடு பொருளை நகைபடு புன்சொலின் தந்திடை மடுத்த கந்திதன் பிழைப்பும் எழுதினர் பிழைப்பும் எழுத்துரு ஒக்கும் பகுதியின் வந்த பாடகர் பிழைப்பும் ஒருங்குடன் கிடந்த ஒவ்வாப் பாடம் திருந்திய காட்சியோர் செவிமுதல் வெதுப்பல் பரிபாடல் – உரைச்சிறப்புப் பாயிரம் : பரிமேலழகர்

கற்றால் தீரும் இழிதகைமை

கற்றால் தீரும் இழிதகைமை எழுத்தறியத் தீரும் இழிதகைமை தீர்ந்தான் மொழித்திறத்தின் முட்டறுப்பான் ஆகும் மொழித்திறன் முட்டறுத்த நல்லோன் முதல்நூல் பொருள் உணர்ந்து கட்டறுத்து வீடு பெறும். பரிமேலழகர் மேற்கோள் பாடல்

தமிழ் அறியாதவர்களே காதலைப் பழிப்பார்கள்! அன்றே சொன்னது பரிபாடல்!

    : தமிழ் அறியாதவர்களே காதலைப் பழிப்பார்கள்! அன்றே சொன்னது பரிபாடல்!   தள்ளாப் பொருளியல்பில் தண்டமிழாய் வந்திலார்             கொள்ளாரிக் குன்று பயன்    (பரிபாடல்: 9)   “தள்ள வாராக் காதல் பொருளின் இலக்கணம் கூறும் தமிழை ஆராயாதவரே, மலையிடத்து நிகழும் களவொழுக்கத்தை ஓர் ஒழுக்கமென ஏற்றுக்கொள்ளார்” என்று குன்றம் பூதனார் காரணம் கூறிக் கழறுவர். பிற மொழிகள் எழுத்திலக்கணமும் சொல்லிலக்கணமும் உடையனவேயன்றி, மக்களின் வாழ்வை ஆராய்ந்த பொருளிலக்கணம் கண்டவையல்ல. தமிழ் மொழியோ எனின், முவ்விலக்கணமும் நிறைந்தது. தமிழின் பொருளிலக்கணத்தைக் கல்லாத…

யாவினுள்ளும் நீயே – கடுவன் இளவெயினனார்

தீயினுள் தெறல்நீ; பூவினுள் நாற்றம் நீ; கல்லினுள் மணியும்நீ; சொல்லினுள் வாய்மைநீ; அறத்தினுள் அன்புநீ; மறத்தினுள் மைந்துநீ. கடுவன் இளவெயினனார், பரிபாடல்: 3.63-65