தேவதானப்பட்டிப் பகுதியில் காதோலை கருகமணி வழிபாடு பழமை மாறாமல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்துக்கள் என்றால் காமாட்சியம்மன் கோயில் அல்லது தங்கள் குலதெய்வக்கோயில்களிலும், இசுலாமியர்கள் என்றால் வியாழக்கிழமை வீட்டின் மேற்குப்பகுதியில் பத்தி, பூ, காதோலை கருகமணியை வைத்து தங்கள் மூதாதையர்களை நினைத்து வழிபடும் பழக்கம் உள்ளது. ஒரு சில பெண்கள் அருள்மிகு காமாட்சியம்மனுக்கு நேர்ந்து பக்தர்கள் காதோலை, கருகமணியை வாங்கிப் பயபக்தியுடன் தத்தம் தலைமீது தாங்கித் திருக்கோயிலை வலம் வந்து வடமேற்குத்திசையில் வைக்கின்றனர்.   இவ்வழிபாட்டின் நோக்கம் உடல்நலம், மனநலம், குடும்ப நலம், ஊர்நலம்,…