(தோழர் தியாகு எழுதுகிறார் 180 : வேலிக்கு வேலி! தொடர்ச்சி) பாவலரேறு தொட்ட உயரம் இனிய அன்பர்களே! “என்மொழி, என்னினம், என்நாடு நலிகையில்எதனையும் பெரிதென எண்ண மாட்டேன் – வேறுஎவரையும் புகழ்ந்துரை சொல்ல மாட்டேன்! – வரும்புன்மொழி, பழியுரை, துன்பங்கள் யாவையும்பொருட்டென மதித்துளம் கொள்ள மாட்டேன்! – இந்த(ப்)பூட்கையில் ஓரடி தள்ள மாட்டேன்!” அவர் இப்படித்தான் வாழ்ந்தார்! இப்படித்தான் இயங்கினார்! அவர்தாம் பாவலரேறு பெருஞ்சித்திரனார்! பாவலரேறு பெருஞ்சித்திரனார் என்றால் அவர்தம் எழுத்தைப் படித்தோர்க்கும் உரையைக் கேட்டோர்க்கும் உடனே நினைவுக்கு வருவது அவரது தூய தமிழ் நடைதான். தனித்தமிழ் சொல்லாட்சியில் அவரைப்…