தமிழ்நாடும் மொழியும் 30: பிறநாட்டார் ஆட்சிக் காலம் – பேரா.அ.திருமலைமுத்துசாமி

(தமிழ்நாடும் மொழியும் 29: பிற்காலப் பாண்டியர் வரலாறு  தொடர்ச்சி) 8. பிறநாட்டார் ஆட்சிக் காலம் முன்னர்க் கூறியபடி பாண்டியப் பேரரசு வீழ்ச்சியுற்ற பின்னர் வடக்கிருந்து முகமதியரும், அவரை எதிர்த்த விசய நகர மன்னரும், மராட்டியரும் தமிழ் நாட்டில் நுழைந்து அதனைப் போர்க்களமாக்கி, ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகள் வாழ்ந்து சென்றனர். நம் நாட்டில் நுழைந்த முகமதியர் கோவிலையும், குளத்தையும் கெடுத்து, நாட்டையும், நகரையும் பாழாக்கி, கிடைத்தவற்றை வாரிக்கொண்டு சென்றனர். அக்காலத்திலே விசய நகர வேந்தர் முகமதியர்களை முறியடிப்பதற்கு வீறுகொண்டு எழுந்தனர். மராட்டியரும் மார்தட்டி எழுந்தனர். அவர்கள்…

தமிழ்நாடும் மொழியும் 29: பிற்காலப் பாண்டியர் வரலாறு – பேரா.அ.திருமலைமுத்துசாமி

(தமிழ்நாடும் மொழியும் 28: பிற்காலப் பாண்டியர் வரலாறு தொடர்ச்சி) 7. பிற்காலப் பாண்டியர் வரலாறு தொடர்ச்சி சடாவர்மன் குலசேகரன் பட்டம் பெற்றதும் பாண்டியர்கள் முழு உரிமையுடன் விளங்கலானார்கள். அதன்பின் வந்த பல பாண்டிய மன்னர்கள் பேரரசர்களாக விளங்கினர். பாண்டியர் வரலாற்றுக்குப் பெருந்துணை புரியவல்ல கல்வெட்டுகள் பல 13-ஆம் நூற்றாண்டில் வெட்டப்பட்டன. முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன், சடாவர்மனுக்குப் பின்னர் கி. பி. 1216-இல் பட்டம் பெற்றான். இவன் காலத்தில் சோழ நாட்டை மூன்றாம் இராசராசன் ஆண்டு வந்தான். பாண்டியன் திடீரெனச் சோழ நாட்டைத் தாக்கினான்; இராசராசனை…

தமிழ்நாடும் மொழியும் 28: பிற்காலப் பாண்டியர் வரலாறு – பேரா.அ.திருமலைமுத்துசாமி

(தமிழ்நாடும் மொழியும் 27: சோழர் காலத் தமிழகம் – பேரா.அ.திருமலைமுத்துசாமி தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் 28: 7. பிற்காலப் பாண்டியர் வரலாறு பாண்டியரைப் பற்றிக் கூறுவனவற்றுள் காலத்தால் முந்தியன மெகசுதனீசர் எழுதிய இந்திகா , சாணக்கியனின் அருத்தசாத்திரம், அசோகனின் கல்வெட்டுகள் என்பனவாம். பாண்டியர் மதுரை, நெல்லை, இராமநாதபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களையும் ஆண்டார்கள். பாண்டிய நாடு பருத்திக்கும் முத்துக்கும் பெயர்பெற்ற நாடாகும். பிளினி பாண்டிய நாட்டைப் பற்றிக் கூறியுள்ளார். கி. மு. 40-லிருந்து கி. மு. 30 வரை ஈழ நாட்டைப் பாண்டியன் ஆண்டதாக…