சங்கப் புலவர்கள் பொன்னுரை – 14 : நிலம் பெயர்ந்தாலும் சொன்ன சொல் தவறாதே!- இலக்குவனார் திருவள்ளுவன்

(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 13: உழவும் தொழிலும் சிறக்கட்டும்; செல்வம் பெருகட்டும்! – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 14 நிலம் பெயர்ந்தாலும் சொன்ன சொல் தவறாதே!  “நிலம்பெயரினும் நின்சொற் பெயரல்”         – புறநானூறு, பாடல் எண்-3, அடி 14. பாடியவர்: இரும்பிடர்த் தலையார்பாடப்பட்டோர்: பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதிதிணை : பாடாண்துறை : செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம் நில நடுக்கம் ஏற்பட்டு, இடம் பெயர்ந்தாலும் நீ சொன்ன சொல்லில் இருந்து தவறிச் செல்லாதே…

பாசன அறிவியல் – அன்றே சொன்னார்கள்: இலக்குவனார் திருவள்ளுவன்

(பரணர் பாடலில் நியூட்டன் விதி – தொடர்ச்சி) அன்றே சொன்னார்கள் பாசன அறிவியல் மழை நீரைத் தேக்கிப் பாசனத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் பல நாட்டவர்க்கும் இருந்துள்ளது. ஆனால், நீர்த்தேக்க வகையில் வேறுபாடுள்ளது. கி.மு.3000 ஆண்டைச் சேர்ந்த  சோர்டானில் உள்ள சாவா அணை (Jawa Dam in Jordan)  தொன்மையானது என்கின்றனர். ஆனால், பழந்தமிழர் நாகரிகக்கூறுகள் உள்ள மெசபடோமியாவில் தொடக்கக்காலங்களில் பல நீர்த்தேக்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். மேலும், எகித்து நாட்டவர் தமிழ் நாட்டு அணைக்கட்டு வல்லுநர்களை அழைத்து அணை…

வால் நட்சத்திரம் என்பது நட்சத்திரம் அல்ல! அன்றே சொன்னார்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனியின் நிறம், தன்மை, இயல்பு அறிந்த விந்தை மனிதர்கள்! – தொடர்ச்சி) வால் நட்சத்திரம் என்பது நட்சத்திரம் அல்ல!  இன்றைக்கு நாம் வால்நட்சத்திரம் என்று சொல்லப்படுவதன் கிரேக்கப் பெயர் கோமெட்(kometes) என்பதாகும். இதிலிருந்தே காமெட் (comet) என்னும் ஆங்கிலப் பெயர் தோன்றியது. நீண்ட முடி என்பது இதன் பொருள். கிரேக்க அறிவியலாளர் அரிசுடாடில் (Aristotle) தலைமுடி போல் தெரிவதாகக் கூறி இதனை அப்பொருளில் முதலில் குறிப்பிட்டார். வால் போல் நீண்டுள்ள விண்பொருள் என்னும் பொருளிலேயே  பலர் குறிப்பிடுகின்றனர். உலகில் பஞ்சம், கொள்ளை நோய், ஆட்சி வீழ்ச்சி, தலைவர்…

சனியின் நிறம், தன்மை, இயல்பு அறிந்த விந்தை மனிதர்கள்! – அன்றே சொன்னார்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்

(மழையியல் அறிந்த மாண்பமை தமிழர்கள் அன்றே சொன்னார்கள் 10 – தொடர்ச்சி)                      அன்றே சொன்னார்கள்: சனியின் நிறம், தன்மை, இயல்பு அறிந்த விந்தை மனிதர்கள்!          உரோம் நாட்டினர் சனிக்கோளை வேளாண் கடவுளாகக் (Saturnus) கருதினர். குரோனசு (Cronus) கடவுள் எனக் கிரேக்கர்கள் அழைத்தனர். ஆரியர்கள் சூரியக் கடவுளுக்கும் சாயா என்னும் பெண் கடவுளுக்கும் பிறந்ததாகக் கூறிச் சாயாபுத்திரன் என்கின்றனர். ஆரியக் கதையின்படி எமன் சனிக்கு மூத்தவன். இவ்வாறு ஒவ்வொரு நாட்டினரும் வெவ்வேறு பெயர்களில் அழைத்தனர். என்றாலும் அவையெல்லாம் தொன்மக் கதைகளின் அடிப்படையிலானவையே. சனிக்குப் பிள்ளைகளால்…

முடியுமா, முடியாதா? உண்மையைச் சொல்!-இலக்குவனார் திருவள்ளுவன், தாய் மின்னிதழ்

(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 1, தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 2 முடியுமா, முடியாதா? உண்மையைச் சொல்! ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும்ஒல்லாது இல் என மறுத்தலும், இரண்டும்,ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவதுஇல் என மறுத்தலும், இரண்டும், வல்லேஇரப்போர் வாட்டல் – புறநானூறு 196– திணை : பாடாண் திணை– துறை: பரிசில் கடா நிலை– ஆவூர் மூலங்கிழார் பொருள்:  பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன், பரிசில் தராமல் காலந் தாழ்த்திய பொழுது ஆவூர் மூலங்கிழார்…

வாழ்வை நல்வழிக்கு அழைத்துச் செல்லும் நல்லோர் சொல்!-இலக்குவனார் திருவள்ளுவன், தாய் இதழ்

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 1 ****** பல் சான்றீரே! பல் சான்றீரே!கயல் முள் அன்ன நரை முதிர் திரை கவுள்,பயன் இல் மூப்பின், பல் சான்றீரே!கணிச்சிக் கூர்ம் படைக் கடுந் திறல் ஒருவன்பிணிக்கும் காலை, இரங்குவிர் மாதோ; 5நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான்எல்லாரும் உவப்பது; அன்றியும்,நல் ஆற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே! – புறநானூறு 195– திணை : பொதுவியல்;– துறை: பொருண் மொழிக் காஞ்சி.– நரிவெரூஉத்தலையார் பொருள்: பல்வைக் குணங்களை உடையோரே! பல்வைக் குணங்களை உடையோரே! எனப் புலவர்…

என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 01. பதிப்பரை

என் தமிழ்ப்பணி பதிப்புரை இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத்தின் வரலாற்றில் ஒரு சிறப்பிடத்தைப் பெறத்தக்க வகையில், நல்ல தமிழ் அறிஞராக, வரலாற்றுத் திறனாய்வாளராக, செந்தமிழ்ப் பேச்சாளராக, இலக்கியப் படைப்பாளராக, பாதை மாறாத பகுத்தறிவுவாதியாக, அப்பழுக்கற்ற அரசியல் தலைவராக, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவராக, என பல்திறன் படைத்த நற்றமிழ்ப் புலவராக விளங்கியவர், புலவர் கா. கோவிந்தனார் அவர்கள் “தமிழுக்கும், தமிழ்ப் புலவர்கட்கும், தமிழ் நாட்டுக்கும் தொண்டாற்றத் தன்னையே அருப்பணித்தவர்” என்று பேரறிஞர் அண்ணா அவர்களால் பாராட்டப்பெற்ற பேறு பெற்றவர், பைந்தமிழ்ப் புலவராய் உயர்ந்து, சங்கத் தமிழ்…

வள்ளுவர் சொல்லமுதம் 14 : அ. க. நவநீத கிருட்டிணன் : நன்றி கொன்றவர்க்குக் கழுவாயில்லை

(வள்ளுவர் சொல்லமுதம் 13 : அ. க. நவநீத கிருட்டிணன் : கூ. அறிவும் ஒமுக்கமும்- தொடர்ச்சி) வள்ளுவர் சொல்லமுதம் நன்றி கொன்றவர்க்குக் கழுவாயில்லை. நன்றி கொன்ற மகனுக்குக் கழுவாயே இல்லை. அத்துணைப் பெரிய கொடிய பாவம் நன்றி மறத்தல் என்று வள்ளுவர் வன்மையாகக் கூறுவார்.  ‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய் ந்நன்றி கொன்ற மகற்கு” என்பது அவர்தம் மறைமொழி. ஒருவன் செய்த நன்றி ஒன்றனை நினைந்தபோது, அவன் கொன்றாலன்ன இன்னலைப் பின்னொருகால் கொடுப்பினும் அது மறந்துபோம். அந் நன்றி உணர்ச்சி நடுவுநிலைமையினின்று…

வள்ளுவர் சொல்லமுதம் 13 : அ. க. நவநீத கிருட்டிணன் : கூ. அறிவும் ஒமுக்கமும்

(வள்ளுவர் சொல்லமுதம் 12 : அ. க. நவநீத கிருட்டிணன் : கொடைநலமும் படைவலமும் பிற்பகுதி- தொடர்ச்சி) வள்ளுவர் சொல்லமுதம் அறிவும் ஒமுக்கமும் கற்றும் கேட்டும் தெளிந்தும் பழகியும் பெற்ற அறிவே நிறைந்த அறிவாகும். “கல்வியின் பயன் அறிவு” என்று கற்றறிந்தோர் கூறுவர். தெய்வப் புலவராய திருவள்ளுவர் அறிவின் இலக்கணத்தைத் திறம்பட இயம்பியுள்ளார். கல்வி கேள்விகளின் நிறைவே அறிவு பெறுதற்கு உறுதுணை என்பதை அறிவுறுத்தக் கல்வி கேள்விப் பகுதிகளை அடுத்து அறிவுடைமை என்னும் அதிகாரத்தை அமைத் துள்ளார். நல்லதன் நலனும் தீயதன் தீமையும் உள்ளவாறு…

வள்ளுவர் சொல்லமுதம் 12 : அ. க. நவநீத கிருட்டிணன் : கொடைநலமும் படைவலமும் பிற்பகுதி

(வள்ளுவர் சொல்லமுதம் 11 : அ. க. நவநீத கிருட்டிணன் : அ. கொடைநலமும் படைவலமும் – தொடர்ச்சி) வள்ளுவர் சொல்லமுதம்கொடைநலமும் படைவலமும் பிற்பகுதி என்றும் முகமன் இயம்பா தவர்கண்ணும்சென்று பொருள்கொடுப்பர் தீதற்றோர்’என்பர் சிவப்பிரகாசர். ஒப்புரவு செய்யும் உயர்ந்த உள்ளமுடையார் பிறர்க்கு உதவுவதைத் தமது கடப் பாடு என்று கருதினர். அவர்கள் கைம்மாறு கருதிப் பிறர்க்கு உதவுபவர் அல்லர். மாநிலத்து உயிர்கட்கு மழைவளம் சுரக்கும் மேகம் அவ்வுயிர்கள்பால் எந்தப் பயனையும் எதிர்நோக்குவது இல்லே. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்(டு) என்னாற்றும் கொல்லோ உலகு” என்பது…

இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 6 : வடதிசை வணங்கிய வீரம்

(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 5 : மான வீரம்-தொடர்ச்சி) தமிழர் வீரம் 6 : வடதிசை வணங்கிய வீரம் புலிகேசன்வடநாட்டில் உள்ளது வாதாபி நகரம்1. அந்நகரில் நெடுங்காலம் ஆட்சி புரிந்தனர் சளுக்கர் குல வேந்தர். அக் குலத்திலே தோன்றினான் புலிகேசன் என்னும் வீரன். அவனது படைத்திறங்கண்டு நடுங்கினர் பகைவரெல்லாம். மண்ணாசை பிடித்த புலிகேசன் கங்கரையும் கதம்பரையும் வென்றான்; அவர் ஆண்ட நாடுகளைக் கவர்ந்தான். மாளுவநாட்டு மன்னனும் அவனடி பணிந்தான். புலிகேசன் பெற்ற வெற்றிகளால் வாதாபி நகரம் ஏற்றமும் தோற்றமும் அடைந்தது. நரசிம்மனும் புலிகேசனும்அக்காலத்தில்…

தோழர் தியாகு எழுதுகிறார் : பரணர் பாடிய பேகனும் சாம்ராசு பாடும் தோழர்களும்

(தோழர் தியாகு எழுதுகிறார் : மாண்டவர்கள் உயிர்த்தெழுந்து ஏற்றுக விடுதலை ஒளி!-தொடர்ச்சி) பரணர் பாடிய பேகனும் சாம்ராசு பாடும் தோழர்களும் இனிய அன்பர்களே! மதுரையைக் கதைக் களனாகக் கொண்டு, மா-இலெ தோழர்களை முதன்மைக் கதை மாந்தர்களாகக் கொண்டு, 1980களைக் கதைக் காலமாகக் கொண்டு அன்பர் சாம்ராசு படைத்துள்ள புதினம் கொடை மடம். இறுதியாகப் பெயர் கொடுப்பதற்கு முன்பே இந்தப் புதினத்தைச் சாம்ராசு எனக்குப் படிக்கத் தந்தார். அது சரியான அலைச்சல் நேரம் என்றாலும் சிலநாளில் படித்து முடித்தேன். எடுத்தால் கீழே வைக்க முடியாத இலக்கியச்…