மழை வேண்டாம்! – கி.வா.சகந்நாதன்
“மழை வேண்டாம்!” என்று அவர்கள் சொன்னார்கள். ‘இப்படியும் சொல்வார் உண்டோ?’ என்று நமக்குத்தோன்றுகிறது. எத்தனையோ காலமாக மழையைக் காணாமல் பஞ்சத்தில் அடிபட்ட நமக்கு, “வருமா, வருமா” என்ற ஏக்கம் இருப்பதுதான் இயற்கை. ஆனால், நமக்கு வேண்டிய மழை பெய்து, அதற்கு மேலும் மழை கொட்டு கொட்டென்று கொட்டி ஆற்றில் வெள்ளம், ஏரியில் உடைப்பு, குளங்களில் கரைகள் உடைந்து எங்கும் வெள்ளம் என்ற நிலை ஏற்பட்டால், “மழையே! மழையே! வா,வா!” என்றா பாடுவோம்? “கடவுளே! இப்போதைக்கு மழை வேண்டாம்” என்றுதான் சொல்வோம். மழை பெய்யாமலும்…
பண்டைய இலக்கியச் செல்வத்தைப் பேணுவோம்! – ஔவை துரைசாமி
இடைக்காலத்துத் தமிழகம் தன் பண்டைய இலக்கியச் செல்வத்தைப் பேணும் துறையில் கருத்தைச் செலுத்தியிருக்குமாயின், இத்தமிழகம் இகழ்வார் தலை மடங்க, புகழ்வார் புரட்சி முற்றப் பேரிலக்கியப் பெருமையால் நிலவுலகு பரவும் இசை மிக்கு நிலவுவதாம். இடைக்காலத்தே புன்னெறி வீழ்ந்து அறிவு ஆண்மை பொருள் முதலிய வகையில் அடிமையுற்ற தமிழகம், தனது வீழ்ச்சியால் விளைந்த கேட்டினை நினைக்கின்றது; பிற நாட்டார் தலை வணங்க இருந்த தனது பண்டைச் சிறப்பை எண்ணுகிறது; இடையீறுகளையும் இடையீடுகளையும் போக்கற்கு முயலுகிறது. சுருங்கச் சொல்லின், தமிழகம் பண்டைய தமிழ் கூறும் நல்லுலகமாகும்…
தமிழரின் கடல் வாணிகம் – செங்கைப்பொதுவன்
நாவாய் = பெருங்கப்பல் கலம் = சிறுகப்பல் சேர வேந்தன் வானவன் மேலைக் கடலில் நாவாய் ஓட்டிப் பொன்னுடன் மீண்டான் அந்தக் கடல் வாணிகத்தின்போது பிற கலம் கடலில் செல்லாது பாதுகாக்கும் படையுடன் சென்றான் மலையமான் பெண்ணையாறு பாயும் நாட்டுக்கு உரிய தலைவன். முள்ளூர் நாட்டைத் தனதாக்கிக் கொண்டவன். பகைநாட்டை வென்று அவரது பட்டத்து யானையின் ஓடையில் இருக்கும் பொன்னைக் கொண்டு வாடாத் தாமரை செய்து பாணர்க்கு விருதாகச் சூட்டி மகிழ்ந்தவன். பெண்புலவர் பாடுகிறார். வறுமை நிலையில் வந்துள்ள நான் வல்லமை அல்லாதவள்…
