புறநானூற்றுச் சிறுகதைகள்: நா. பார்த்தசாரதி: ஊசி முனை
புறநானூற்றுச் சிறுகதைகள் 3. ஊசி முனை அப்போது நகரத்திலே திருவிழா சமயம் விழாவின் கோலாகலமும் ஆரவாரமும் நகரெங்கும் நிறைந்து காணப் பட்டன. ஊரே அந்தத் திருவிழாவில் இரண்டறக் கலந்து ஈடுபட்டிருந்தது. ‘விழா என்றால் மக்களின் உள்ளத்தில் மகிழ்ச்சிக்குக் கேட்கவா வேண்டும்? ஆனால், இந்த மகிழ்ச்சியில் தனக்கும் பங்கு வேண்டும் என்பதுபோல மழை இடைவிடாமல் பெய்து கொண்டிருந்தது. திருவிழா ஆரவாரத்தின் விறுவிறுப்பை அதிகப்படுத்தியிருந்தது இந்த மழை. மழையில் நனைந்து கொண்டும் விழா காண்பதற்காக நகர வீதிகளில் பொங்கி வழிந்து கொண்டிருந்தது மக்கள்…
புறநானூற்றுச் சிறுகதைகள்: நா. பார்த்தசாரதி: ஒரு சொல்
புறநானூற்றுச் சிறுகதைகள் நா. பார்த்தசாரதி 1. ஒரு சொல் உறையூரில் சோழன் நலங்கிள்ளியின் அரண்மனை. ஒருநாள் மாலைப் பொழுது நலங்கிள்ளியின் தம்பியாகிய மாவளத்தானும் தாமப்பல் கண்ணனார் என்ற புலவரும் பொழுது போகச் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தார்கள். தாமப்பல் கண்ணனாருக்குச் சொக்கட்டான் விளையாட்டில் அதிகமான பழக்கமோ திறமையோ கிடையாது. ஆனால், அவரோடு விளையாடிக் கொண்டிருந்த மாவளத்தானுக்கோ அடிக்கடி அந்த விளையாட்டை விளையாடி விளையாடி நல்ல பழக்கமும் திறமையும் ஏற்பட்டிருந்தன. சாதாரணமாக இம்மாதிரித் திறமையால் ஏற்றத் தாழ்வு உடையவர்கள் எதிர் எதிரே உட்கார்ந்து விளையாடும் விளையாட்டுக்கள்…
“ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே” (புறம்: 312) பெண்ணடிமைத்தனமா ? – தமிழரசி
“ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே (புறம்: 312) பெண்ணடிமைத்தனமா ? பொன்முடியார் எனும் சங்ககாலப்பெண்புலவர், குழந்தையைப் பெற்றேடுப்பதை விட அப்பிள்ளையைப் பாதுகாத்துப் பேணி வளர்ப்பதே தாய்மாரின் பெரும் பொறுப்பாகும். அதிலும் கன்னியரையும் காளையரையும் சமுதாய நலம் பேணுபவராய் வளர்த்து எடுத்துக் கொடுப்பது மிகமிகக் கடினமான செயலாகும். அந்தக் கடினமான செயலைச் சங்ககாலத் தாய்மார் தத்தம் பண்புகளுக்கு ஏற்ப மிக நன்றாகவே செய்திருக்கிறார்கள் என்பதைச் சங்கப்பாடல்கள் காட்டுகின்றன. சங்ககாலத் தாய்மார் அப்படி வளர்த்திராவிட்டால் சங்கப்பாடல்களையும், சங்க இலக்கியங்களையும், சங்கச்சான்றோர்களயும் நாம் கண்டிருக்க முடியுமா? “ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே சான்றோன் ஆக்குதல்…
அரசியல்வாதிகளே! நற்செயல் விதையுங்கள்! புகழை அறுவடை செய்யுங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்
அரசியல்வாதிகளே! நற்செயல் விதையுங்கள்! புகழை அறுவடை செய்யுங்கள்! அரசியல்வாதிகள் மக்கள் பணிக்காக அரசியலில் ஈடுபடுவதாகக் கூறுகின்றனர். ஆனால் மக்கள் நலனுக்காக வருவதாகக் கூறுபவர்கள் தங்களையும் தங்கள் சார்ந்தவர்கள் நலன்களையுமே கவனத்தில் கொண்டு தங்களை வளர்த்துக் கொள்கிறார்கள். அரசியல் என்பது வணிமாக்கப்பட்டதால், சிறு முதல் போட்டு, பெரு முதல் எடுப்பதுபோல், தேர்தல் நேரங்களில் மக்களுக்கு அன்பளிப்புகள் வழங்கி வெற்றியை ஈட்டுகின்றனர். வெற்றி பெற்றதும் மக்கள் நலனில் கருத்து செலுத்தாமல் போட்ட முதல்தொகையை எடுப்பதில் கவனம் செலுத்தி ஊழலில் ஈடுபடுகின்றனர். அன்னக்காவடியாக இருந்தவர்களும் மன்னனைப்போல் செல்வம்…
புறநானூற்றில் நிதி மேலாண்மை – அ.அறிவுநம்பி
(புதுவைப்பல்கலக்கழகத்தின் தமிழ்த்துறை புல முதன்மையர் முதலான பல பொறுப்புகளில் பணியாற்றி மறைந்த அறிஞர் முனைவர் அறிவுநம்பி மறைவிற்கு அகரமுதல இரங்கலைத் தெரிவிக்கும் வகையில் அவரது கட்டுரை ஒன்றினை வெளியிடுகிறது. மரபார்ந்த புலவர் வழியினர் அவர், என்பதை இக்கட்டுரையின் நடை காட்டுகின்றது. இன்றைய கட்டுரையாளர்கள் நல்ல தமிழில் பிழையின்றி எழுத வேண்டும் என்பதற்கு இது போன்ற கட்டுரைகளை முன்னெடுத்துக்காட்டுகளாகக் கொள்ள வேண்டும். கருத்தரங்கம் ஒன்றில் வாசிக்கப்பெற்ற இக்கட்டுரை ஏமலதா வலைப்பூ விலிருந்து எடுக்கப்பட்டது – ஆசிரியர் ) [நினைவுக்குறிப்பு: ‘சித்தர் இலக்கியம்’ குறித்தப் பன்னாட்டுக்…
புறநானூறு ஓர் ஒப்பற்ற அறிவுச் சுரங்கம் – புலியூர்க் கேசிகன்
புறநானூறு ஓர் ஒப்பற்ற அறிவுச் சுரங்கம் பழந்தமிழ்ச் சான்றோர் தொகுத்துப் பேணிய தமிழ்ச் செல்வங்களுள், புறநானூற்றுத் தொகைநூல் ஒப்பற்ற ஒளிர்மணிக் கோவையாகும். அருளும் ஆண்மையும், பண்பும் பாசமும், பாவும் பாவலரும், இசையும் இசைப்போரும், அரசும் நாடும், மக்களும் மன்னரும் அன்பும் பண்பும் உயிர்ப்புடன் விளங்குகின்ற நிலைகளைப் புறநானூற்றுள் கண்டு களிக்கலாம். புத்துணர்வும் புதுவாழ்வும் பெறத் துடிதுடிக்கும். தமிழ் மக்களுக்குப் புறநானூறு ஓர் ஒப்பற்ற அறிவுச் சுரங்கம். தென்னகத்தின் பண்டைய வரலாற்றைக் காட்டி, நம்மையும் வீரஞ் செறிந்த தமிழராக்கும் தூண்டுகோல் புறநானூறு…
வரலாற்று நூலாகத் திகழ்வது புறநானூறு – அ.சிதம்பரநாதன்
வரலாற்று நூலாகத் திகழ்வது புறநானூறு சங்கக்காலத் தமிழ்ப் புலவர்கள் மக்கள் வாழ்வில் அமைந்த நல்லியல்புகளையே தம் பாடல்களிற் பாராட்டினார்கள். தீமை செய்வோர் வேந்தராயினும் அஞ்சாது இடித்துரைத்து அவரைத் திருத்தினார்கள். இங்ஙனம், ‘நல்லதன் நலனும் தீயதன் தீமையும்’ இவையென உள்ளவாறு விளக்கி, மக்களுக்கு நல்லுணர்வு வழங்கிய நல்லிசைப் புலவர்களுடைய உள்ளத்துணர்ச்சிகளின் பிழம்பாகவும், சங்கக்காலத் தமிழகத்தின் வரலாற்று நூலாகவும் திகழ்வது புறநானூறு. -முனைவர் அ.சிதம்பரநாதன்: ஒளவை சு.துரைசாமியின் புறநானூற்று உரைக்கான அணிந்துரை
இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 31-50 – இலக்குவனார் திருவள்ளுவன்
(இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 11- 30 – தொடர்ச்சி) இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 31-50 காவிரி புரக்கும் நன் நாட்டு பொருந – நல்லிறையனார, புறநானூறு, 393.23 (காவிரியால் காக்கப்படும்நல்லநாட்டின் பொருந) முழங்குநீர்ப் படப்பைக் காவிரிக் கிழவன் – ஐயூர் முடவனார் , புறநானூறு, 399. 11-12 (முழங்குகின்ற நீர்நலம் உடைய காவிரி பாயும் நாட்டுத் தலைவன்) 33. காவிரி புரக்கும் நாடு கிழவோனே – முடத்தாமக்கண்ணியார், பொருநராற்றுப்படை, 248 (காவிரியால் காக்கப்படும் நாட்டிற்கு உரியவனே!) 34. மலைத்தலைய கடல்…
இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 11- 30 – இலக்குவனார் திருவள்ளுவன்
(இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 01- 10 தொடர்ச்சி) இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 11- 30 இலங்கு நீர் காவிரி இழி புனல் வரித்த: தாயங்கண்ணனார், அகநானூறு, 213.22 (சிறந்து விளங்கும் காவிரி நீர் வரிவரியாகச் செய்திட்ட(கருமணல்)) தாழ் இரும் கதுப்பின் காவிரி வவ்வலின்: பரணர், அகநானூறு, 222.8 (தாழ்ந்த கூந்தலையுடைய காவிரிப்பெண் கவர்ந்துகொண்டதால்) விடியல் வந்த பெரு நீர் காவிரி: பரணர், அகநானூறு, 226.10 ( விடியற்காலையில் புதுவெள்ளம் பெருக வந்த காவிரி) கழை அளந்து அறியா காவிரி படப்பை:…
முத்தமிழ் ஆய்வு மன்றத்தின் இலக்கியத்திருவிழா, சென்னை
ஆனி 10, 2047 / சூன் 24, 2016 மாலை 6.00 மாக்கவி பாரதிநகர், சென்னை
உயிர் பிரியும் தறுவாயிலும் கொடை வழங்கிய நெடுஞ்சேரலாதன் – மயிலை சீனி வேங்கடசாமி
உயிர் பிரியும் தறுவாயிலும் கொடை வழங்கிய வள்ளல் சேரவேந்தர் நெடுஞ்சேரலாதன் நெடுஞ்சேரலாதன் சேரநாட்டில் இருந்துகொண்டு ஆட்சி புரிந்து வருகையில் கொங்குநாட்டுக் கருவூரைத் தலைநகராகக் கொண்டு அந்துவஞ்சேரல் இரும்பொறை ஆட்சி செலுத்தி வந்தான். இவர்கள் காலத்தில் சோழநாட்டை ஆண்டு வந்த வேந்தன் வேல்பஃறடக்கைப் பெருநற்கிள்ளி என்றும் பெரு விறற்கிள்ளி என்றும் அழைக்கப்பட்டான். நெடுஞ்சேரலாதனுக்கும் இந்தச் சோழ அரசனுக்கும் போர் மூண்டது. அந்தப் போரானது ‘போர்’1 என்னுமிடத்தில் நடைபெற்றது. சோழன் அவனைப் ‘போர்’ என்ற நகரத்திற்கு வெளியே எதிர்த்துப் போராடினான். போரில் இருதிறத்துப் படைகளும்…
புறநானூற்று அறிவியல் வளம் (2)– இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல 127, பங்குனி 21, 2047 / ஏப்பிரல் 03, 2015 தொடர்ச்சி புறநானூற்று அறிவியல் வளம் 2 காற்றறிவியல் பஞ்ச பாண்டவர்களில் பீமன் குந்திக்கும் வாயுக்கும் பிறந்தவன் என்பதும் வாயுக்கும் அஞ்சலைக்கும் பிறந்தவன் அனுமான் என்பதும் ஆரியப் புராணம். ஆரியர்கள் வாயு எனப்படும் காற்றை, இயற்கையாக எண்ணாமல் அறிவியல் உணராதவர்களாகவே இருந்துள்ளனர். கிரேக்கர்கள் ஆதித்தெய்வங்களுள் ஒன்று காற்று எனக் கருதினர். அவர்களின் தொன்மைக் கதைகளின்படி, இருளுக்கும் (Erebus) இரவுக்கும்(Night) பிறந்த மகன் காற்று; இவன் பகலின் (Hemera) உடன்பிறப்பு என்றும்…