வெருளி அறிவியல் 31 – 33 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி அறிவியல்  முந்தைய பகுதி தொடர்ச்சி) வெருளி அறிவியல் 31 – 33   31.ஆடை வெருளி – Vestiphobia ஆடை குறித்த அளவுகடந்த பேரச்சம் ஆடை வெருளி. குழந்தைப்பருவத்தில் உடை உடுத்துவது குறித்த எரிச்சல் விருப்பமின்மை முதலியன வளர்ந்து இத்தகைய பேரச்சத்தை உருவாக்குவதும் உண்டு. படைத்துறை முதலான சீருடைத் துறைகளில் பணியாற்றுவோருக்கு ஆடை வெருளி உள்ளது. தாய் அல்லது தந்தைக்கு ஆடை வெருளி இருந்தால் பிள்ளைகளுக்கும் வர வாய்ப்பு உள்ளதாகக் கூறுகின்றனர். புதுவகை ஆடைகளைக் கண்டு எரிச்சலுற்று ஆடை வெருளிக்கு ஆளாவோரும் உள்ளனர். vestis…

வெருளி அறிவியல் – 9 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி அறிவியல் 8 இன் தொடர்ச்சி) வெருளி அறிவியல்  –  9 27. அறிவுவெருளி-Epistemophobia/Gnosiophobia அறிவு தொடர்பில் எழும் தேவையற்ற மிகையான பேரச்சமே அறிவுவெருளி. சிலருக்குப் புதியதாக எதைக் கற்க / அறிய வேண்டுமென்றாலும் பேரச்சம் வரும். சிலருக்குக் குறிப்பிட்ட ஒன்றைக் கற்க அல்லது அறிய மட்டும் பேரச்சம் வரும். பள்ளிக்கூடம் செல்ல பிள்ளைகள் அடம்பிடித்து மறுப்பதும் அறிவு வெருளிதான். பலர் படிப்படியாக இதிலிருந்து விடுபட்டு விடுகின்றனர். சிலர் இதிலிருந்து விடுபடாமல் முழுமையான அறிவு வெருளிக்கு ஆட்பட்டுவிடுகின்றனர். gnos  / epistemo ஆகிய கிரேக்கச்சொற்களின்…

வெருளி அறிவியல் – 8 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி அறிவியல் 7 இன் தொடர்ச்சி) வெருளி அறிவியல்  –  8  23. அழிவு வெருளி-Atephobia அழிவு பற்றிய இயல்பிற்கு மீறிய பேரச்சம்  அழிவு வெருளி அழி(74), அழிக்குநர்(1), அழிக்கும்(6), அழித்த(8), அழித்தரும்(1), அழித்தலின்(2), அழித்தான்(1), அழித்து(15), அழிதக்கன்று(2), அழிதக்காள்(1), அழிதக(6), அழிதகவு(1), அழிதரு(2), அழிந்த(14), அழிந்தன்று(1), அழிந்தனள்(1), அழிந்து(37), அழிந்தோர்(3), அழிப்ப(3), அழிப்படுத்த(1), அழிபவள் (1), அழிபு(4), அழிய(26), அழியர்(1), அழியல்(2), அழியலன்(1), அழியா(3), அழியாதி(1), அழியாது(1), அழியின்(1), அழியுநர்(1), அழியும்(4), அழிவது(3), அழிவல்(1), அழிவு(14), அழீஇ(1) ஆகிய சொற்கள் அழிவு தொடர்பாகச்…

வெருளி அறிவியல் – 7 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி அறிவியல் 6 இன் தொடர்ச்சி) வெருளி அறிவியல்  –  7 18. அயலிந்தியர் வெருளி-Mikatikoindicaphobia  அயல்நாட்டில் வாழும் இந்தியர்கள் (NRI) தொடர்பில் ஏற்படும் தேவையற்ற அச்சம் அயலுறை இந்தியர்கள் வெருளி. சுருக்கமாக அயலிந்தியர் வெருளி எனலாம். வெளிநாட்டிலிருந்து செல்வம் திரட்டி வந்து, இங்கே நம் தொழிலைச் சிதைப்பார்கள், செல்வத்தைத் தேய்ப்பாரகள், செல்வாக்கை ஒடுக்குவார்கள், வளர்ச்சியை அழிப்பார்கள் என்றெலலாம் தேவையற்ற கவலையும் அளவு கடந்த வெறுப்பும் கொள்வர். Indica என்பது இலத்தீனிலும் கிரேக்கத்திலும் இந்தியாவைக் குறிப்பிடும் சொல். 00 19. அரசியலர் வெருளி-Politicophobia/ civiliphobia…

வெருளி அறிவியல் – 6 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி அறிவியல் 5 இன் தொடர்ச்சி) வெருளி அறிவியல்  –  6 12. அம்மண வெருளி Dishabiliophobia/Gymnophobia /Nudophobia அம்மணம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அம்மண வெருளி. அம்மணமாக இருப்பது அல்லது தன்னுடைய அம்மண நிலையைப் பிறர் பார்ப்பது பிறரின் அம்மண நிலையைப் பார்ப்பது தொடர்பான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் கொண்டிருப்பர். gymnos என்னும் கிரேக்கச் சொல்லிற்கு  உடுப்பற்ற எனப் பொருள். (gymnasion என்னும் கிரேக்கச் சொல்லிற்கு உடற்பயிற்சிக்கான இடம் எனப் பொருள். gymnasein என்றால் உடையின்றிப் பயிற்சி எனப் பொருள்.) ஆடையிலி வெருளி(Dishabiliophobia),…

வெருளி அறிவியல் – 5 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி அறிவியல் 4 இன் தொடர்ச்சி) வெருளி அறிவியல்  –  5 7. அணுஆயுத வெருளி-Nucleomituphobia அணுஆயுதங்கள் மீதான அளவுகடந்த பேரச்சம் அணுஆயுத வெருளி. அணுஆயுதக்கருவிகள் இல்லாவிட்டாலும் இருந்து பயன்படுத்தப்படாமல் இருந்தாலும், அவை பயன்படுத்தப்பட்டுப் பேரழிவுகள் ஏற்படும் என்று கருதுவதால் உருவாகும் அச்சம் அணுஆயுத வெருளி. அமெரிக்கத் தலைவர்களுக்கு ஈராக்கு மீது ஏற்பட்டஅச்சம் இத்தகையதுதான். என்றாலும் அணுஆயுதக் கருவிகள்  இல்லை என்றறிந்த பொழுதும் இருப்பதாகப் பிறரை அச்சுறுத்தி அந்நாட்டை அழிக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டது. போர் முழக்கங்களும் அமைதியின்மையும் வல்லரசு ஆசையும் நிறைந்த உலகில்…