பண்பட்ட மொழியின் செம்மைசால் மலரே இலக்கியமாகும்! – சி.இலக்குவனார்

  எழுத்தைப் பற்றியும் சொல்லைப் பற்றியும் விரிவாக உரைத்த ஆசிரியர் தொல்காப்பியனார், எழுத்தால் ஆக்கப்பட்ட சொற்றொடர் கருவியாக அறியப்படும் பொருளைப் பற்றி உரைப்பதுவே அவர் நூலின் மூன்றாம் பகுதியாகும். எழுத்தும் சொல்லும் மொழியைப் பற்றியன. மொழியைத் திருத்தமாக நன்கு பயன்படுத்த மொழி நூலறிவு வேண்டும். திருத்தமுற்ற மொழியின் செம்மைப் பண்பு நிலைத்திருக்க அம்மொழியில் உரையும், பாட்டும் தோன்றுதல்வேண்டும். அவ்வாறு தோன்றும் உரையும் பாட்டுமே இலக்கியம் எனப்பட்டன. பண்பட்ட மொழியின் செம்மைசால் மலரே இலக்கியமாகும். ஒரு மொழிக்கு வளமும், வாழ்வும் அளிப்பது இலக்கியமே. இலக்கியம் தோன்றப்…

வள்ளுவர் வகுத்த அரசியல் – – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

(முந்தைய இதழ்த் தொடர்ச்சி)   உ. பொருள் செயல்வகை  நாட்டுக்கு அரணும் படையும் இன்றியமையாதன. அவற்றை ஆக்கவும் காக்கவும் பொருள் மிகமிக இன்றியமையாதது. ஆதலின், பொருளைச் செய்தலின் திறம் இங்குக் கூறப்படுகின்றது. பொருள் நாட்டையாள்வோருக்கு மட்டுமன்றி ஆளப்படுவோர்க்கும் இன்றியமையாதது.   1. பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள்.  (குறள் 751)      [பொருள்அல் லவரைப் பொருளாகச் செய்யும்     பொருள்அல்லது இல்லை பொருள்.] பொருள் அல்லவரை – ஒரு பொருளாக மதிக்கப்படும் தகுதி இல்லாதாரை(யும்), பொருளாகச் செய்யும்-ஒரு பொருளாக மதிக்கச்…