(உ.வே.சா.வின் என் சரித்திரம் 49 : அபய வார்த்தை – தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம் 49 கலைமகள் திருக்கோயில் மாயூரத்தில் வசந்தோற்சவம் ஆன பிறகு சுப்பிரமணிய தேசிகர்திருவாவடுதுறைக்குப் பரிவாரங்களுடன் திரும்பி வந்தனர். அவருடன்பிள்ளையவர்களும் நாங்களும் திருவாவடுதுறை வந்து சேர்ந்தோம். வழக்கப்படிமடத்திலே பாடங்கள் நடைபெற்று வந்தன. தேசிகரின் பொழுது போக்கு சுப்பிரமணிய தேசிகர் காலை எழுந்தது முதல் இரவில் துயிலச் செல்லும்வரையிற் பாடம் சொல்வது, வித்துவான்களோடு சம்பாசணை செய்வது,மடத்திற்கு வருபவர்களுடைய குறைகளை விசாரித்து வேண்டிய உதவிகளைச்செய்வது ஆகிய விசயங்களிலே பெரும்பாலும் பொழுதைப் போக்கி வந்தார்….